நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மறுசுழற்சியில் ஒரு மாஸ்டர் பிளான்: கடல் கண்ட அழகிய பூங்கா

கோலா திரெங்கானு:

ஒரு காலத்தில் கண்களுக்குக் குறையாகக் கருதப்பட்ட ஒரு குவியலான கடல் குப்பைகள், இங்குள்ள ஓய்வுபெற்றவர்கள், உள்ளூர்வாசிகள் குழுவின் படைப்பாற்றலின் விளைவாக ஒரு தனித்துவமான மினி-பூங்காவாக மாற்றப்படும் என்று யார் நினைத்திருப்பார்கள்.
இந்த யோசனையைப், 'பாப்பா யா' என்று பரவலாக அறியப்பட்ட, 63 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியர் சக்காரியா தைப், தனது நண்பர்களான கணவன்-மனைவி ஜோடியான முஹம்மத் உம்பைதா (63), ஜலேஹா அபுபக்கர் (63) ஆகியோருடன் இணைந்து தொடங்கினார்.

சென்டெரிங், கோலா ஈபாய் பாத்து புருக் போன்ற கோலா திரெங்கானு சுற்றியுள்ள கடற்கரையில் அவர்கள் சேகரித்த, தூக்கி எறியப்பட்ட பொருட்களின் குவியல்கள் வீசப்படுவதைக் கண்ட பிறகு, இந்தத் தோட்டத்திற்கான யோசனை தன்னிச்சையாக உருவானது என்றார் சக்காரியா .

"முதலில், நாங்கள் குப்பைகளைச் சேகரித்து அப்புறப்படுத்திக் கொண்டிருந்தோம், ஆனால் காலப்போக்கில் அதை வெறுமனே தூக்கி எறிவது ஒரு வீண் என்று நாங்கள் உணர்ந்தோம். அதிலிருந்து, ஆறு மாதங்களுக்கு மேல், இந்தப் பொருட்களைச் சிறிது சிறிதாகச் சேகரிக்கத் தொடங்கினோம், சுமார் நான்கு டன் வரை குவித்தோம்.

"நாங்கள் பாட்டில் வீடு என்ற கருப்பொருளிலிருந்து உத்வேகம் பெற்றோம், ஆனால் இங்கே நாங்கள் கைவிடப்பட்ட செருப்புகளைப் பயன்படுத்தி அதற்கு எங்கள் சொந்தத் திருப்பத்தை அளித்துள்ளோம். இன்றுவரை, கெங் பிளாஸ்டிக் இஜா (GPI) திட்டத்தின் கீழ் 500 முதல் 700 ஜோடிகளுக்கு மேல் செருப்புகள் சேகரிக்கப்பட்டுள்ளன," என்று வெள்ளிக்கிழமை இங்கு சந்தித்தபோது அவர் கூறினார்.

மேலும்,  GPI பூங்கா எனப் பெயரிடப்பட்ட இந்தப் பகுதி, அக்டோபர் 2025 முதல் கட்டங்கட்டமாக கட்டப்பட்டதாகவும் மேசை, நாற்காலி அலங்காரங்கள் அனைத்தும் கடல் அலைகளில் அடித்து வரப்பட்ட மரங்கள், நிராகரிக்கப்பட்ட பொருட்களால் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

திரெங்கானு கடற்கரையின் இயற்கை நிலப்பரப்பைப் பாதுகாக்கும் நோக்கில், பல்வேறு இனங்களைச் சேர்ந்த சுமார் 200 தேங்காய் மரங்கள் கொத்துகளாக நடப்பட்டதன் மூலம் இந்தப் பகுதி மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset