செய்திகள் மலேசியா
ஈகைப் பெருநாள் கொண்டாட்டங்களுக்கு நிலையான மின்சார விநியோம்: TNB உறுதி
கோலாலம்பூர்:
அய்டில்ஃபித்ரி பண்டிகைக் காலத்தில் நிலையான மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்காக, தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) விரிவான நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ளது.
இந்த மாபெரும் மின்சார நிறுவனம் நாடு தழுவிய வலையமைப்பு மேம்பாடுகள், முக்கிய சொத்துக்களைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பது உள்ளிட்ட செயல்பாட்டுத் தயார்நிலைத் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது.
ஷவ்வால் பிறை தென்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பிருந்து, 11,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருப்பார்கள் என TNB தெரிவித்துள்ளது.
விநியோகத்தில் ஏற்படும் எந்தவொரு தடைகளையும் சரிசெய்ய தொழில்நுட்பக் குழுக்கள் உடனடி நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக TNB-யின் மூத்த தலைமை வலையமைப்பு அதிகாரி மஹாதீர் நூர் இஸ்மாயில் கூறினார்.
"பொதுமக்கள் தேவையான ஏற்பாடுகளைச் செய்து, தங்கள் அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியுடன் அய்டில்ஃபித்ரியைக் கொண்டாட இது முக்கியமானது," என்று அவர் கூறினார்.
ஒரு மாற்று நடவடிக்கையாக, நிறுவனம் 136 நடமாடும் மின்னாக்கிகளை முக்கிய இடங்களில் நிறுத்தியுள்ளது. ஆகர் கிரேன்கள், பராமரிப்பு லாரிகள் உள்ளிட்ட 379 துணை வாகனங்கள் கொண்ட ஒரு குழுவும் விரைந்து செயல்படுவதற்காகத் தயார் செய்யப்பட்டுள்ளது.
விநியோக வலையமைப்பை நிலைப்படுத்த, சுமை சமநிலைப்படுத்தும் முயற்சிகள், மேம்படுத்தப்பட்ட மின்மாற்றித் திறன் உள்ளிட்ட கூடுதல் தணிப்பு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் பேசிய மஹாதீர் பண்டிகை வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, மின்சாரப் பாதுகாப்பு, எரிசக்தி சேமிப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 18, 2026, 8:47 pm
மலேசிய வாழ் தெலுங்கு மக்கள் அனைவருக்கும் 'உகாதி சுபகாஞ்சலு': டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
March 18, 2026, 6:04 pm
முதலை தாக்கிய சம்பவம்: கை, கால் இன்றி கண்டுபிடிக்கப்பட்ட ஆடவரின் சடலம்
March 18, 2026, 6:02 pm
"என் பெயர் அஸ்னாஃப்களின் பட்டியலில் மட்டுமே உள்ளது": முன்னாள் தொலைக்காட்சி பிரபலம்
March 18, 2026, 6:01 pm
4 மாத குழந்தை நீரில் மூழ்கியதால் உயிரிழந்தது
March 18, 2026, 5:40 pm
நெகிரி செம்பிலான் பெர்சத்து சயாப் பிரிவின் தலைவராக டத்தோ சரவணக்குமார் நியமனம்
March 18, 2026, 5:27 pm
மின்னணு கழிவு கடத்தலை தடுக்க அமைச்சு சிறப்பு அமலாக்க பணிக்குழு அமல்படுத்துகிறது
March 18, 2026, 4:50 pm
நெகிரி செம்பிலான் மாநில அரசின் திறந்த இல்ல உபசரிப்பு ரத்து
March 18, 2026, 4:47 pm
வழிபாட்டு தலம் மீண்டும் சேதப்படுத்தப்பட்டதா?: ஆடவர் கைது
March 18, 2026, 3:11 pm
