நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சாலைகளை ‘குப்பைத்தொட்டி’ ஆக்க வேண்டாம்: கோர் மிங் எச்சரிக்கை

ஷா ஆலம்: 

சாலைகளைக் குறிப்பாக பண்டிகை காலங்களில் ‘குப்பைத்தொட்டி’ போல பயன்படுத்த வேண்டாம் என வீடமைப்பு, உள்ளூராட்சி அமைச்சர் ங்கா கோர் மிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த ஹரி ராயா காலத்தை முன்னிட்டு, 300-க்கும் மேற்பட்ட திடக்கழிவு மேலாண்மை, பொதுச் சுத்தம் கழகம் (SWCorp) அமலாக்க அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் விதிமீறி பிடிபட்டால் RM2,000 அபராதமும், 12 மணி நேர சமூக சேவை தண்டனையும் விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

“குப்பை இருந்தால், அதை வாகனத்திலேயே வைத்துக்கொண்டு, குப்பைத்தொட்டியில் போடுங்கள்.

“பிடிபட்டால் சமூக சேவை தண்டனையை நீங்கள் எதிர்கொள்ள வேண்டி வரும். பெரியவர்கள், குழந்தைகள் அல்லது வெளிநாட்டவர்கள் என பாராபட்ச்சம் பாராது இந்தத் தண்டனை அனைவருக்கும் பொருந்தும்,” என்று அவர் இன்று இங்கு, செக்ஸ்யேன் 13, ஏயோன் மால் ஷா ஆலம் வளாகத்தில் நடைபெற்ற ‘Sort, Drop & Recycle The Carton’ திட்ட அறிமுக விழாவில் கூறினார்.

முன்னதாக, 2007ஆம் ஆண்டின் திடக்கழிவு மேலாண்மை, பொதுச் சுத்தம் சட்டம் (சட்டம் 672) கீழ் சமூக சேவை தண்டனை, ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இது பொதுஇடங்களில் சிறிய அளவில் குப்பை வீசும் பிரச்சினையைச் சமாளிக்க அறிமுகப்படுத்தப்பட்டது.

வீடமைப்பு, உள்ளூராட்சி அமைச்சகம் (KPKT) கடந்த டிசம்பர் 31 வெளியிட்ட அறிக்கையில், இந்தத் தண்டனை ஜொகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், பகாங், பெர்லிஸ்,  ஆகிய மாநிலங்களிலும், கூட்டாட்சி பிரதேசங்களான கோலாலம்பூரிலும், புத்ராஜாயாவிலும் அமல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.

 பினாங்கு, சிலாங்கூர், கிளந்தான், திரெங்கானு ஆகிய மாநிலங்களில் சட்டம் 672 அமல்படுத்தப்படாததால், மாநில அரசுகளின் அனுமதியைத் தொடர்ந்து விரைவில் அமல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நாடு முழுவதும் பொதுஇடங்களில் குப்பை வீசியதாக ‘ஊலாட் சம்பா’ என அழைக்கப்படும் 1,054 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக கோர் மிங் தெரிவித்தார்.

“பலர் ஏற்கனவே சமூக சேவை தண்டனையை அனுபவித்து வருகின்றனர். சிலருக்கு RM2,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சாலை சுத்தம் செய்தல், கால்வாய் சுத்தம் செய்தல், கழிப்பறை சுத்தம் செய்தல் போன்ற பணிகளை 12 மணி நேரம் செய்ய வேண்டும்.

“ஒரே நாளில் முடிக்க முடியாவிட்டால், ஆறு நாட்களுக்கு பிரித்து, தினமும் இரண்டு மணி நேரம் செய்து முடிக்க வேண்டும்,” என்றார் அவர்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset