நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வழிபாட்டு தலம் மீண்டும் சேதப்படுத்தப்பட்டதா?: ஆடவர் கைது

ஈப்போ: 

வழிபாட்டு தலத்தை அவமதித்த குற்றச்சாட்டில் 33 வயதான ஒருவருக்கு இங்குள்ள மஜிஸ்திரேட் நீதிமன்றம் எட்டு மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.

மரச்சாமான் கடை உதவியாளராக பணிபுரியும் குற்றவாளி, செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) குற்றத்தை ஒப்புக்கொண்டதாக பேராக் மாநில போலிஸ் தலைவர் கமிஷனர் டத்தோ நூர் ஹிசாம் நொர்டின் தெரிவித்தார். 

இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 295ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை, குற்றவாளி சன்வே சிட்டியில் உள்ள ஒரு கோவிலில் பலிபீடத்தைச் சேதப்படுத்தியதாக அவர் கூறினார்.

“அதே நாளில் காலை 8 மணியளவில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

“CCTV காட்சிகளைப் பரிசோதித்ததில், குற்றச்செயலை அவர் செய்தது உறுதி செய்யப்பட்டது,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும், குற்றவாளி தனியாகவே இந்தச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து பொதுமக்கள் தேவையற்ற ஊகங்களைப் பரப்ப வேண்டாம் என்றும், அனைத்து சமுதாயங்களின் மத உணர்வுகளையும் மதிக்க வேண்டும் என்றும் போலிஸ் வலியுறுத்தியுள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset