நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெண் பயிற்சி மருத்துவரின் மரண வழக்கும் பாலியல் தொந்தரவு வழக்கும் வெவ்வேறு சம்பவங்கள்: அதிகாரிகள் உறுதி

கோத்தா பாரு: 

கோலா கிராய் மருத்துவமனையில் 6 மார்ச் அன்று நிகழ்ந்த ஒரு பெண் பயிற்சி மருத்துவரின் மரணம், அதே மருத்துவமனையில் ஏற்பட்ட பாலியல் தொந்தரவு வழக்குடன் தொடர்புடையதாக இல்லை என்று கிளந்தான் போலிஸ் தெரிவித்துள்ளது.

ஒரே இடமாக இருப்பினும் மரண சம்பவமும் பாலியல் தொந்தரவு வழக்கும் வெவ்வேறு குற்றவாளிகள், பாதிப்பாளர்களுடன் சம்பவித்த இரண்டு தனித்துவமான வழக்குகள் என்று கிளந்தான் போலிஸ் தலைவர் டத்தோ முஹம்மத் யூசோப் மாமட் தெரிவித்துள்ளார்.

"இரு சம்பவங்களுக்கும் நேரடி தொடர்பு இல்லை. மரணமடைந்த பெண் பயிற்சி மருத்துவர் சம்பவம் இன்னும் விசாரணைக்குட்பட்டுள்ளது, இதுவரை இது அதிர்ச்சி  மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது," என அவர் கூறினார்.

முன்னதாக, 29 வயது பெண் பயிற்சி மருத்துவர் காலை 9:55 மணிக்கு மருத்துவமனை உணவுக்கூட அறையில் உயிரிழந்ததாகக் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. சம்பவத்துடன் தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட நபர்கள் போலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

வேறு வழக்கில், 26 வயது ஒரு பயிற்சி மருத்துவர் ஒருவர் பெண்ணைப் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தியதற்காகவும், தவறான படங்களை வைத்திருந்ததற்காகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

செப்டம்பர் 13, 2025 அன்று காலை 6.30 மணிக்கு, இங்குள்ள சுல்தான் இஸ்மாயில் பெட்ரா மருத்துவமனையின் இரண்டாம் தளத்தில் உள்ள குளியலறையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தெரியாமல் அவர் குளிப்பதை ஒரு கருப்பு கேமராவைப் பயன்படுத்திப் பதிவுசெய்து, அவரை அவமானப்படுத்த முயன்றதாக அந்த நபர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவியல் சட்டம் பிரிவு 509 கீழ் ஐந்து வருட சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டையும் விதிக்கப்படலாம்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset