செய்திகள் மலேசியா
தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக இலவச வீடமைப்பு திட்டம்: பெர்லிஸ் மாநில அரசு அறிவிப்பு
கங்கார்:
பெர்லிஸ், கோலா பெர்லிஸில் உள்ள கம்போங் புலாவ் கெத்தாம் பகுதியில் நேற்று ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் தங்கள் வீடுகளைப் பறி கொடுத்த 5 குடும்பங்களுக்குப் புதிய வீடுகளைக் கட்டித் தர மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது குறித்துப் பேசிய மாநில முதலமைச்சர் அபு பக்கர் ஹம்சா, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குச் சொந்தமாக வேறு நிலமோ அல்லது வீடோ இல்லாத காரணத்தால், அவர்கள் வசித்த இடத்திலேயே புதிய வீடுகளைக் கட்ட ஏதுவாக மாநிலச் செயற்குழுவின் சிறப்பு அனுமதியைக் கோரவுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தப் பெர்லிஸ் இஸ்லாமியச் சமய, மலாய் கலாச்சார மன்றத்தின் கீழ் கட்டுமானப் பணிகளைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த வீடுகள், கண் இமைக்கும் நேரத்தில் சாம்பலானதால் திகைத்துப் போயுள்ள அந்தப் பழங்குடியின மக்களுக்கு இது பெரும் ஆறுதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நோன்புப் பெருநாள் நெருங்கி வரும் வேளையில், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்களாக அருகில் உள்ள மக்கள் மண்டபங்களை ஒதுக்கவும், அல்லது உறவினர்கள் வீடுகளில் தங்குவதற்குத் தேவையான உதவிகளைச் செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 18, 2026, 5:40 pm
நெகிரி செம்பிலான் பெர்சத்து சயாப் பிரிவின் தலைவராக டத்தோ சரவணக்குமார் நியமனம்
March 18, 2026, 3:11 pm
சாலைகளை ‘குப்பைத்தொட்டி’ ஆக்க வேண்டாம்: கோர் மிங் எச்சரிக்கை
March 18, 2026, 3:10 pm
நாட்டின் மிகப்பெரிய இணையம் வழி உயர் கல்வி நிகழ்வு
March 18, 2026, 3:08 pm
தனிமையில் சிக்கிய நபர் மீதான விசாரணை பாலியல் பலாத்கார வழக்காக மாறியது
March 18, 2026, 3:07 pm
நிச்சயதார்த்தப் பெண்ணைத் தாக்கிய ஆடவருக்கு RM1,500 ரிங்கிட் அபராதம்
March 18, 2026, 2:05 pm
மழலையர் காப்பகத்தில் 4 மாதக் குழந்தை மரணம்; மூச்சுத்திணறலே மரணத்திற்குக் காரணம்: போலிஸ்
March 18, 2026, 2:05 pm
