நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நிச்சயதார்த்தப் பெண்ணைத் தாக்கிய ஆடவருக்கு RM1,500 ரிங்கிட் அபராதம்

கோத்தா பாரு: 

தனது முன்னாள் நிச்சயதார்த்தப் பெண்ணைத் தாக்கி காயப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 20 வயது சமூக ஊடகப் பிரபலம் சையத் ஜம்ரி சையத் ஜைனுதீனுக்கு, கோத்தா பாரு மஜிஸ்திரேட் நீதிமன்றம் RM1,500 ரிங்கிட் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. 

சையத் ஜம்ரி தன் மீதான குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்தத் தண்டனை வழங்கப்பட்டது. அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் அவருக்கு நான்கு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி மாலை 5.30 மணியளவில், தாமான் எஹ்சான் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து 19 வயதுடைய புத்திரி ஃபாஷா ஃபெலிசா என்பவரைத் தாக்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. 

இச்சம்பவத்தின் போது ஏற்பட்ட மோதலில், அந்தப் பெண்ணின் வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டதாக மருத்துவ அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. தார்மீக அடிப்படையில் இக்குற்றம் தண்டனைக்குரியது என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அவர்களுக்கிடையிலான நிச்சயதார்த்தத்தை உடனடியாக ரத்து செய்தனர்.

இதன் காரணமாக, எதிர்வரும் நோன்புப் பெருநாளைத் தொடர்ந்து நடைபெறவிருந்த இவர்களது திருமணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தண்டனைச் சட்டத்தின் 323-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு, சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset