செய்திகள் மலேசியா
ஜம்ரி வினோத் இன்று குற்றம்சாட்டப்படவில்லை
கோலாலம்பூர்:
சுய மத போதகரான ஜம்ரி வினோதிற்கு எதிரான வழக்கின் விசாரணை இன்னும் நடைபெற்று கொண்டிருப்பதால் அவர் இன்று குற்றம் சாட்டப்படவில்லை.
மலேசிய காவல்துறை (PDRM) ஜம்ரி குறித்து இதுவரை எந்த விதமான குற்றச்சாட்டும் செய்யப்படவில்லை என்றும் வழக்கின் முன்னேற்றம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் உறுதிப்படுத்தியது.
மேலும் e-நீதி (e-kehakiman) கணினித் தரவுத்தள பரிசோதனை மூலம் இன்று மதியம் வரை ஜம்ரியின் பெயர் பதிவு செய்யப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், ஜம்ரி எப்போது கோலாலம்பூர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று அவரது வழக்கறிஞர் முஹம்மத் ஹானிப் காத்திரி அப்துல்லா கூறினார்.
இந்திய சமூகத்தைக் குறிவைத்து இனவெறி கருத்துக்களை வெளியிட்டதாகவும், பிப்ரவரி 7 ஆம் தேதி அங்கீகரிக்கப்படாத கோயில் பிரச்சினை தொடர்பாக நடைபெற்ற கூட்டம் தொடர்பான அறிக்கைகளுக்காகவும் ஜம்ரி விசாரிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, போலிசார் தாய்லாந்து அதிகாரிகளுடன் இணைந்து ஜம்ரியையும் செயற்பாளர் தமிம் தஹ்ரி அப்துல் ரசாக் ஆகியோரைக் கண்டுபிடித்து மீட்டெடுக்க முயற்சித்து வருகின்றனர் என்று தேசிய காவல்துறை தலைவர் டத்தோ ஸ்ரீ முஹம்மத் கலித் இஸ்மாயில் தெரிவித்திருந்தார்.
எனினும், ஜம்ரி தப்பிக்க முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்து, இதற்கு காரணமில்லை என்றும், தேவையானால் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக உள்ளார் என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து, கோலாலம்பூர் நீதிமன்றத்தில் இன்று மாலை 11 பேர் "சட்டவிரோத கோவில்கள்" சம்பந்தமான வழக்கு தாக்கல் செய்ய உள்ளனர்.
வழக்கறிஞர் டத்தோ ஜைனுல் ரிஜால் அபு பக்கர், தனது தரப்பினர் இன்று பிற்பகல் 2 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராவார்கள் என்று கூறினார்.
"இன்று, ஒரு சட்டவிரோத மத இல்லத்தில் கூடவிருந்தபோது தவறாக தடுத்து வைக்கப்பட்டதற்காக 11 வாதிகளால் அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தொடரப்படும்.
"வாதிகள் ஒரு முறை ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 16, 2026, 4:16 pm
தீ விபத்தில் கருகிய வீட்டிற்கு அருகிலேயே கண்ணீருடன் வாழும் 66 வயது மூதாட்டி
March 16, 2026, 4:15 pm
"பிரிந்தவர்கள் மீண்டும் இணைவோம்": அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹமத் ஜாஹித்
March 16, 2026, 4:05 pm
மலேசிய இந்திய முஸ்லிம் இளைஞர் இயக்கம் கெபிமா'வின் மாந்த நேய நோன்பு திறப்பு நிகழ்ச்சி
March 16, 2026, 3:27 pm
பட்டாசுடன் விளையாடியதில் துண்டான 4 வயது சிறுவனின் விரல்
March 16, 2026, 3:26 pm
பொது சேவையாளர்களுக்கு “வீட்டில் இருந்து பணியாற்றுதல்” BDR? ஆலோசனைகள் தொடக்கம்
March 16, 2026, 1:44 pm
பாரிஸ்க்கு பயணம் செய்யும் மலேசியர்கள் வழிப்பறி திருடர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்: தூதர்
March 16, 2026, 1:42 pm
இனவெறி அறிக்கைகளால் இன நல்லிணக்கத்தை சீர்குலைப்பது கண்டிக்கத்தக்கது: கணபதிராவ்
March 16, 2026, 1:41 pm
