நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாரிஸ்க்கு பயணம் செய்யும் மலேசியர்கள் வழிப்பறி திருடர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்: தூதர்

பாரிஸ்:

பாரிஸ்க்கு பயணம் செய்யும் மலேசியர்கள் வழிப்பறி திருடர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

பிரான்ஸ் நாட்டிற்கான  மலேசிய தூதர் டத்தோ எட்லீன் ஹுசைனி முகமட் ஹாசிம் இதனை கூறினார்.

பிரான்ஸை, குறிப்பாக பாரிஸ் நகரத்தை பார்வையிடுவது உண்மையில் பெரும்பாலான மக்களின் கனவாகும்.

இருப்பினும் அழகுக்குப் பின்னால் பலருக்கு ஒரு கனவாகவோ அல்லது கவலையாகவோ மாறும் ஒரு கதை உள்ளது.

அதாவது பிக்பாக்கெட் வழிப்பறி  திருடர்களால் பாதிக்கப்படுவோமோ என்ற பயம்.

இது சம்பந்தமாக பாரிஸுக்கு வருகை தந்தவர்களுக்கு, நகரத்தின் அழகை ரசிப்பதில் உற்சாகமாக இருந்தாலும், பாதுகாப்பு அம்சத்தை புறக்கணிக்கக்கூடாது.

நாட்டிற்கு பயணம் செய்யும் போது பிக்பாக்கெட் திருடர்களால் பாதிக்கப்பட்ட மலேசியர்களிடமிருந்து தூதரகம் ஒவ்வொரு மாதமும் சராசரியாக இரண்டு அறிக்கைகளைப் பெறுகிறது.

இங்குள்ள பிராஸ்ன் போலிஸ், அரசு சாரா நிறுவனங்கள் இப்போது பெருகிய முறையில் துணிச்சலாக மாறி வரும் பிக்பாக்கெட் கும்பல்களை எதிர்த்துப் போராடுவதிலும் கையாள்வதிலும் மிகவும் தீவிரமாக உள்ளன என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset