செய்திகள் மலேசியா
மஇகாவின் சதுரங்கப் போட்டியில் 548 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்கேற்பு; நாட்டிலேயே பெரிய போட்டியாக விளங்குகிறது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
ஷாஆலம்:
மஇகா ஏற்பாடு செய்துள்ள சிலாங்கூர் தமிழ்ப்பள்ளிகளுக்கான சதுரங்கப் போட்டியில் 548 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.
இது நாட்டிலேயே மிகப் பெரிய சதுரங்கப் போட்டியாக விளங்குகிறது என்று மஇகா தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே சதுரங்க விளையாட்டின் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மாநில மஇகாவின் ஏற்பாட்டில் இந்த போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்த விளையாட்டு போட்டியில் சிலாங்கூர் மாநிலத்தில் இருந்து கிட்டத்தட்ட 540 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் நாட்டில் மிகப் பெரிய சதுரங்கப் போட்டியாக திகழ்கிறது.
மேலும் சதுரங்கப் போட்டி கட்டொழுங்குடன் மாணவர்களிடையே சிந்திக்கும் ஆற்றலை அதிகரிக்கிறது.
அதன் அடிப்படையில் இதுபோன்ற போட்டிகளை மஇகா தொடர்ச்சியாக நடத்தும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
மஇகாவின் கீழ் செயல்படும் எம்ஐஇடி, ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் வாயிலாக கிடைக்கும் வருமானத்தை நாங்கள் சொந்தமாக செலவு செய்ய முடியாது.
இதுபோன்ற நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்ள முடியும். இவ்விவகாரத்தில் நாங்கள் சுயநலத்துடன் செயல்பட முடியாது.
இந்திய சமுதாயமும் மாணவர்களும் பயன் பெற வேண்டும். இது தான் எங்களின் இலக்கு என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 5:49 pm
அதிகாலை வேளையில் ரானாவை உலுக்கிய நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என அறிவுறுத்தல்
April 21, 2026, 5:47 pm
மாணவர்களின் தேவையைப் பயன்படுத்தி லாபமா?
April 21, 2026, 4:59 pm
போக்குவரத்து விதிகளுக்கு மதிப்பளிக்காத மதுப் பிரியர்கள்
April 21, 2026, 4:48 pm
சீன மயானத்தில் அநாகரிகச் செயல் வழக்கில் கைதான தம்பதியினர் விடுதலை: 12 மாத சிறைத் தண்டனை ரத்து
April 21, 2026, 3:14 pm
பட்டதாரிகளின் திறமை வீணாகக் கூடாது: வேலை தேடும் இளைஞர்களுக்குக் கூடுதல் உதவிகள்
April 21, 2026, 2:59 pm
