செய்திகள் மலேசியா
மலைப்பாதையில் விபரீதம்; பேருந்து சக்கரத்தில் சிக்கிய மாணவன்
பெந்தோங்:
நேற்று ஜாலான் துருன் கெந்திங் ஹைலாண்ட்ஸின் 0.8 கிலோமீட்டரில், ஆடவர் ஒருவர் ஓட்டிய மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, தடம் புரண்டு, ஒரு பேருந்தின் அடியில் சிக்கியதில், 17 வயதான மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காலை 11.52 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், தலையில் ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக, பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்ததாக உறுதி செய்யப்பட்டது.
பெந்தோங் மாவட்ட போலிஸ் தலைவர் சூப்பிரண்டெண்டன் ஜைஹாம் முஹம்மத் கஹார், 47 வயதுடைய உள்ளூர் ஆடவரால் ஓட்டப்பட்ட ஒரு பேருந்தும், சம்பந்தப்பட்ட இளைஞரால் ஓட்டப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிளும் இந்த விபத்தில் சம்பந்தப்பட்டதாக தெரிவித்தார்.
சம்பவத்தின் போது, அந்தப் பேருந்து 31 பயணிகளை ஏற்றிச் சென்றதாகவும், கெந்திங் ஹைலாண்ட்ஸிலிருந்து ஜொகூரின் குளுவாங்கிற்குச் சென்று கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
"சம்பவ இடமானது மலைச்சரிவு வளைவாகையால் பாதிக்கப்பட்டவர் ஓட்டிய மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, பின்னர் தடம் புரண்டதாக நம்பப்படுகிறது.
"அந்த மோட்டார் சைக்கிள், பின்னர் பேருந்தின் அடியில் சிக்கியது. பாதிக்கப்பட்டவர், பேருந்தின் டயர் பகுதியில் சிக்கி உயிரிழந்தார், " என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பேருந்து ஓட்டுநருக்கும், 31 பயணிகள் அனைவருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை என்று ஜைஹாம் கூறினார்.
"1987 ஆம் ஆண்டின் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1) கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது" என்றார் அவர்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 30, 2026, 10:28 am
தானா மேராவில் பரபரப்பு: 13 குற்றப் பின்னணி கொண்ட நபர் துப்பாக்கிச் சூட்டின் பின் அதிரடியாக கைது
April 30, 2026, 10:16 am
நாடற்ற நிலையில் நடுத்தெருவில் நிற்கும் குழந்தைகள்: சபாவில் தொடரும் அவலநிலை
April 30, 2026, 10:07 am
கடன் தகராறு: மாணவன் மீது கொடூரத் தாக்குதல்
April 30, 2026, 10:05 am
மானிய விலையில் டீசல் கிடைக்காததால் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளோம்: ரோரோ லோரி உரிமையாளர்கள் குமுறல்
April 30, 2026, 9:43 am
சிலாங்கூரில் கடும் வறுமை பிரச்சினை ஒழிக்கப்பட்டுள்ளது: பிரதமர் அன்வார்
April 29, 2026, 8:11 pm
நாளை முதல் ரோன் 97 பெட்ரோல் 5 சென்னும் ரோன் 95 பெட்ரோல் 10 சென்னும் உயரும்: நிதியமைச்சு
April 29, 2026, 8:09 pm
