நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி; தேசிய முன்னணி சட்டமன்ற உறுப்பினரின் முடிவை அம்னோ மதிக்கிறது: அஷ்ரஃப் வாஜ்தி

கோலாலம்பூர்:

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூண் மீது நம்பிக்கையிழந்த  நெகிரி செம்பிலான் தேசிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர் முடிவை அம்னோ மதிக்கிறது என்று அஷ்ரஃப் வாஜ்தி கூறினார்.

அதே நேரத்தில்.மக்களின் நல்வாழ்வும் பேணப்படுவதை உறுதி செய்வதற்காக, மாநிலத்தில் உள்ள ஒற்றுமை அரசாங்கத்திற்குத் தொடர்ந்து ஆதரவளிக்கிறது.

நெகிரி செம்பிலானின் அரச நிறுவனங்கள், அரசியலமைப்பை அமினுதீன் புறக்கணிக்கும் மனப்பான்மையுடன் தொடர்புடைய தங்களது நடவடிக்கைகள் குறித்து, 

நெகிரி செம்பிலான் அம்னோ தொடர்பு அமைப்பின் தலைவர் டத்தோஸ்ரீ ஜலாலுடின் அலியாஸிடம் இருந்து அம்னோ ஒரு முழுமையான விளக்கத்தைக் கேட்டறிந்தது.

இது தொடர்பாக, அந்தந்தக் கட்சிகளின் போராட்டக் கொள்கைகள் தொடர்பான பல சிக்கல்களைத் தீர்க்க வேண்டும்.

அம்னோ அரசியல் செயற்குழுவிற்கும் நம்பிக்கை கூட்டணி அரசியல் செயற்குழுவிற்கும் இடையே உடனடியாக ஒரு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று அம்னோ பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் அஷ்ரஃப் வாஜ்டி கூறினார்.

ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் 5(சி) பிரிவுக்கு இது இணக்கமாக உள்ளது. 

அப்பிரிவு, சர்ச்சைக்குரிய அனைத்து கொள்கைப் பிரச்சினைகளும் ஆலோசனைக் குழுவில் தீர்க்கப்பட வேண்டும் என்று கோருகிறது என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset