செய்திகள் மலேசியா
கட்டமைப்பு, இலக்கவியல் தணிக்கை நடத்துமாறு அம்பாங் மருத்துவமனைக்கு சுகாதார அமைச்சு உத்தரவு: டாக்டர் சுல்கிப்லி
அம்பாங்:
கட்டமைப்பு, இலக்கவியல் தணிக்கை நடத்துமாறு அம்பாங் மருத்துவமனைக்கு சுகாதார அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்லி அஹ்மத் இதனை கூறினார்.
அம்பாங் மருத்துவமனையின் பழுதடைந்த உள்கட்டமைப்பினால் எழும் அடிப்படைப் பிரச்சினைகள் முறையாக கையாளப்பட வேண்டும்
தள அடிப்படையில் அம் மருத்துவமனையில் ஒரு விரிவான கட்டமைப்பு, இலக்கவியல் தணிக்கையை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
தனது சமூக ஊடகப் பதிவில், நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்புவதையும், நோயாளிகளின் பாதுகாப்பு சமரசமற்ற முன்னுரிமையாகத் தொடர்வதையும் உறுதிசெய்ய சுகாதார அமைச்சு அவசரமாகச் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.
மருத்துவமனை தகவல் அமைப்பில் ஏற்பட்ட இடையூறு குறித்து, கணினி தொகுதியைப் பாதித்த ஒரு தொழில்நுட்பப் பராமரிப்புப் தவறே இதற்குக் காரணம்.
தொழில்நுட்பக் குழு, கணினித் தரவு ஒருமைப்பாட்டுச் சரிபார்ப்பை மேற்கொண்டு வருகிறது.
மருத்துவப் பராமரிப்பு எந்தவித இடையூறும் இன்றி கைமுறையாகத் தொடர்வதை உறுதி செய்வதற்காக, வணிகத் தொடர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய இலக்கவியல் அமைப்பு, உள்கட்டமைப்புச் சவால்கள் தொடர்பான மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட மருத்துவமனைக்குச் சென்ற பிறகு அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2026, 10:28 am
தானா மேராவில் பரபரப்பு: 13 குற்றப் பின்னணி கொண்ட நபர் துப்பாக்கிச் சூட்டின் பின் அதிரடியாக கைது
April 30, 2026, 10:16 am
நாடற்ற நிலையில் நடுத்தெருவில் நிற்கும் குழந்தைகள்: சபாவில் தொடரும் அவலநிலை
April 30, 2026, 10:07 am
கடன் தகராறு: மாணவன் மீது கொடூரத் தாக்குதல்
April 30, 2026, 10:05 am
மானிய விலையில் டீசல் கிடைக்காததால் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளோம்: ரோரோ லோரி உரிமையாளர்கள் குமுறல்
April 30, 2026, 9:43 am
சிலாங்கூரில் கடும் வறுமை பிரச்சினை ஒழிக்கப்பட்டுள்ளது: பிரதமர் அன்வார்
April 30, 2026, 9:36 am
மலைப்பாதையில் விபரீதம்; பேருந்து சக்கரத்தில் சிக்கிய மாணவன்
April 29, 2026, 8:11 pm
நாளை முதல் ரோன் 97 பெட்ரோல் 5 சென்னும் ரோன் 95 பெட்ரோல் 10 சென்னும் உயரும்: நிதியமைச்சு
April 29, 2026, 8:09 pm
