செய்திகள் மலேசியா
அசாம் பாக்கி விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்: ரபிசி
கோலாலம்பூர்:
அசாம் பாக்கி விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்.
முன்னாள் பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி இதனை கூறினார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் பங்குகள் மீதான விசாரணை அறிக்கையை உடனடியாகவும் வெளிப்படையாகவும் வெளியிடுமாறு அரசாங்கம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணை முடிக்கப்பட்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும்,
இன்றுவரை விசாரணை முடிவுகள் தொடர்பான விரிவான தகவல்கள் பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை.
இதுவரை அறியப்பட்ட தகவல்கள் தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் ஒரு செய்தியாளர் சந்திப்பின் மூலம் மட்டுமே பெறப்பட்டுள்ளன.
ஆனால் அது முழு விசாரணை முடிவுகளையும் விவரிக்கவில்லை.
இதுவரை, பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்து தெரிவிக்கப்பட்ட தகவல்கள், அசாம் விதிகளை மீறியதாகத் தெரிகிறது.
அதனால்தான், இந்த விஷயம் பொது சேவைத் துறை ஒழுங்குமுறை வாரியத்திற்கு மேல் நடவடிக்கைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று அவர் இன்று முகநூல் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 5:49 pm
அதிகாலை வேளையில் ரானாவை உலுக்கிய நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என அறிவுறுத்தல்
April 21, 2026, 5:47 pm
மாணவர்களின் தேவையைப் பயன்படுத்தி லாபமா?
April 21, 2026, 4:59 pm
போக்குவரத்து விதிகளுக்கு மதிப்பளிக்காத மதுப் பிரியர்கள்
April 21, 2026, 4:48 pm
சீன மயானத்தில் அநாகரிகச் செயல் வழக்கில் கைதான தம்பதியினர் விடுதலை: 12 மாத சிறைத் தண்டனை ரத்து
April 21, 2026, 3:14 pm
பட்டதாரிகளின் திறமை வீணாகக் கூடாது: வேலை தேடும் இளைஞர்களுக்குக் கூடுதல் உதவிகள்
April 21, 2026, 2:59 pm
