செய்திகள் மலேசியா
வேலை வாய்ப்புகள், திறன்கள், ஊதிய மீள்திறனை வலுப்படுத்த 710 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான திட்டத்தை பிரதமர் அறிவித்தார்
புக்கிட்ஜாலில்:
வேலை வாய்ப்புகள், திறன்கள், ஊதிய மீள்திறனை வலுப்படுத்த 710 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான திட்டத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்தார்.
உலகளாவிய எரிபொருள் விநியோக நெருக்கடி புதிய சவாலை ஏற்படுத்துகிறது.
இந்த நெருக்கடியை எதிர்கொள்வதுடன் வேலை நிலைத்தன்மை, திறன்களை வலுப்படுத்தும் நோக்கில் 710 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள ஒரு புதிய தொழிலாளர் சந்தை முன்னெடுப்பான, திறன், வேலை வாய்ப்புகள், பொருளாதார மீள்திறன் ஆகியவற்றை இத்திட்டம் உள்ளடக்கியுள்ளது.
புக்கிட் ஜாலிலில் நடைபெற்ற 2026 தேசிய தொழிலாளர் தினக் கொண்டாட்டத்தில் உரையாற்றிய டத்தோஸ்ரீ அன்வார்,
மலேசியாவின் வேலைவாய்ப்புச் சூழலை வலுப்படுத்தும் வகையில் இந்தத் தொகுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.
தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்துதல், மீள்திறன், உயர்திறன் பயிற்சிக்கு ஆதரவளிக்கும்.
மேலும் பாதிக்கப்பட்ட துறைகளில் பணியாளர்களைத் தக்கவைத்து மீண்டும் பணியமர்த்த முதலாளிகளுக்கு உதவுதல் போன்ற இலக்கு நடவடிக்கைகளுடன் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
13ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் வரவிருக்கும் தொழிலாளர் சந்தை சீர்திருத்தங்கள் மனிதவள அமைச்சு, பெர்கேசோ, தேலண்ட் கோர்ப், எச்ஆர்டி கோர்ப் போன்ற நிறுவனங்கள் நடத்தி வரும் தற்போதைய திட்டங்களுக்கு இது துணைபுரியும்.
ஆக மொத்தத்தில் இத்திட்டம் மலேசியர்களுக்கு பெரும் பயனை தரும் என்று டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2026, 10:34 am
சுக் நெடுஞ்சாலையில் டோல் சாவடியை லோரி மோதியதில் 15 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்
May 1, 2026, 10:16 am
மனிதாபிமானப் பணியில் முட்டுக்கட்டை: காசா உதவிக்கப்பல் மீது இஸ்ரேல் தாக்குதல்
April 30, 2026, 11:44 pm
