நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2030ஆம் ஆண்டுக்குள் மாதச் சம்பளத்தை 3,000 ரிங்கிட்டாக உயர்த்த அரசு இலக்கு கொண்டுள்ளது: டத்தோஸ்ரீ ரமணன்

புக்கிட்ஜாலில்:

நாட்டின் தொழிலாளர் சந்தையில் விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம், 2030ஆம் ஆண்டுக்குள் மாதச் சம்பளத்தை 3,000 ரிங்கிட்டாக உயர்த்த அரசு இலக்காகக் கொண்டுள்ளது.

இது தொழிலாளர்களின் நிலையை வலுப்படுத்தும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்

13ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ்  ஆற்றல்மிக்க, தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் ஒரு தொழிலாளர் படையை உருவாக்குவதை மலேசியா நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் குறைந்த திறன் கொண்ட வேலைகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும்.

அதே வேளையில், 2030ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்ச மாதாந்திர ஊதியத்தை 3,000 ரிங்கிட்டா க உயர்த்துவதை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது.

மலேசியா வெறும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைத் தாண்டிச் செல்ல வேண்டும்.

"மலேசியாவில் தயாரிக்கப்பட்டது என்பது உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

அதனால் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த மட்டும் விரும்பவில்லை. அதை உருவாக்க அரசு விரும்புகிறது.

இன்று புக்கிட் ஜாலிலில் நடைபெற்ற தேசிய தொழிலாளர் தினக் கொண்டாட்டத்தின் போது பேசிய டத்தோஸ்ரீ ரமணன் இவ்வாறு கூறினார்.

இந்த இலக்கை ஆதரிக்கும் வகையில், சிப் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு  ஆகியவற்றில் தொழிலாளர்களுக்குப் பயிற்சி அளிக்க, மனிதவள அமைச்சு ஒரு குறைக்கடத்தி அகாடமியை நிறுவும்.

மேலும் எதிர்கால வேலைவாய்ப்புச் சவால்களுக்கு ஏற்றவாறு 26 தொழிலாளர் தொடர்பான சட்டங்கள் பொருத்தமானதாக இருப்பதை உறுதி செய்ய அமைச்சு அவற்றைச் சீர்திருத்தி வருவதாக என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset