செய்திகள் மலேசியா
சரவாக்கில் 10 சதவீத காவல்துறையினருக்கு மட்டுமே ஹரிராயா விடுப்பு
கூச்சிங்:
நோன்புப் பெருநாள் காலத்தில் பாதுகாப்பு பணிகளை உறுதிப்படுத்தும் வகையில், சரவாக் காவல்துறையில் பணியாற்றும் சுமார் 11 ஆயிரம் அதிகாரிகள், பணியாளர்களில் 10 சதவீதத்தினருக்கு மட்டுமே விடுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சரவாக் காவல் ஆணையர் டத்தோ முஹம்மத் ஜைனல் அப்துல்லா கூறுகையில், சாலைகளில் பயணிகளின் பாதுகாப்பையும், விடுமுறைக்கு செல்லும் குடும்பங்கள் விட்டுச் செல்லும் வீடுகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
ஹரிராயாவை முன்னிட்டு அடுத்த வாரம் “பாதுகாப்பு நடவடிக்கை” தொடங்கப்படும் என்றும், அதில் குறிப்பாக சாலை பாதுகாப்பு மீது கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், பண்டிகை காலத்தில் வீட்டை விட்டு வெளியேறும் பொதுமக்கள் தங்களது இல்லம் காலியாக இருப்பதை கைபேசி பயன்பாட்டின் மூலம் காவல்துறைக்கு தெரிவிக்கலாம் என்றும் முஹம்மத் ஜைனல் அறிவுறுத்தினார்.
இதற்கிடையில், இந்த பண்டிகை காலத்தில் பட்டாசுகள் விற்பனைக்காக 584 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும், அதில் 572 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அனுமதி வழங்கப்பட்டவை குறிப்பிட்ட வகை பட்டாசுகளுக்கு மட்டுமே எனவும், இதுபோன்ற விற்பனை ஹரிராயா மட்டுமின்றி சீனப் புத்தாண்டு, காவாய் திருவிழா போன்ற மற்ற பண்டிகைகளிலும் அனுமதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 11, 2026, 7:59 pm
கம்போங் பாண்டான் மதரஸாவில் வசதிக் குறைந்தவர்களுக்கு ரமலான் உதவி: முக்மின் வழங்கியது
March 11, 2026, 7:39 pm
3ஆர் பிரச்சினைகளை இன்னும் கடுமையாக கையாள அரசாங்கம் சட்டங்களை திருத்தலாம் அல்லது வரையலாம்: ஃபஹ்மி
March 11, 2026, 7:10 pm
மலேசிய - இந்தியா மகளிர் தொழில் முனைவோர், இளைஞர்களுடனான ஒத்துழைப்புகள் வலுப்பெற வேண்டும்: ஹேமலா
March 11, 2026, 5:13 pm
காணாமல் போன தஹ்பிஸ் மாணவி கண்டுபிடிக்கப்பட்டார்
March 11, 2026, 5:02 pm
