செய்திகள் மலேசியா
11 மூத்த போலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம், பதவி உயர்வு
கோலாலம்பூர்:
மலேசிய காவல் துறை (PDRM) இன்று 11 மூத்த அதிகாரிகள் தொடர்பான இடமாற்றங்களை அறிவித்துள்ளது. இதில் புக்கிட் அமான் பல துறைகளிலும், சில மாநிலங்களின் மாவட்ட போலிஸ் தலைவர்கள் அடங்குவர்.
இந்த இடமாற்றங்கள் புக்கிட் அமான் மேலாண்மை துறை, சிறப்பு பிரிவு, வணிக குற்ற விசாரணை துறை, குற்றத் தடுப்பு, சமூக பாதுகாப்பு துறைகளில் பணியிடங்களை உள்ளடக்கியதாகும் என்று மலேசிய போலிஸ் செயலாளர், துணை கமிஷனர் அப்துல் ரஹ்மான் காசிம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக புக்கிட் அமான் மேலாண்மை துறையின் (நிர்வாகம்) பிரிவின் முதன்மை உதவி இயக்குநராக இருந்த டத்தோ முஹம்மத் பைசல் யாஹ்யா, அதே துறையின் மேலாண்மை (நிர்வாகம்) துணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனுடன் அவர் துணை கமிஷனர் பதவியிலும் பொறுப்பேற்று செயல்படுகிறார்.
முன்னதாக பிடிஆர்எம் காவல் துறைத் தலைவரின் (KPN) சட்ட பிரிவு செயலாளர் அலுவலகத்தின் தலைவராக இருந்த மூத்த உதவி கமிஷனர் அப்துல் ரஹ்மான் அத்தான், புக்கிட் அமான் நேர்மை, தரநிலை இணக்கத் துறையின் (Jabatan Integriti dan Pematuhan Standard) துணை இயக்குநர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதனுடன் அவர் துணை கமிஷனர் பதவியிலும் பொறுப்பேற்று செயல்படுகிறார்.
“இதற்கிடையில், புக்கிட் அமான் சிறப்பு பிரிவு E7A உதவி இயக்குநராக இருந்த மூத்த உதவி கமிஷனர் முஹம்மத் ரோஸ்லான் அஹம்மத் ஜுனைடி, புக்கிட் அமான் சிறப்பு பிரிவு E7 முதன்மை உதவி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனுடன் அவர் துணை கமிஷனர் பதவியிலும் பொறுப்பேற்று செயல்படுகிறார்,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த இடமாற்றங்களில் செபராங் பெராய் தெங்கா மாவட்ட போலிஸ் தலைவர் உதவி கமிஷனர் ஹெல்மி அரிஸ், ஜொகூர் மாநில மேலாண்மை துறைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வங்சா மாஜு மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் முஹம்மத் லாசிம் இஸ்மாயில், புக்கிட் அமான் வணிக குற்ற விசாரணை துறையின் துணை இயக்குநர் (மூலோபாய திட்டமிடல்) பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
புக்கிட் அமான் குற்றத் தடுப்பு, சமூக பாதுகாப்பு துறையின் தடுப்பு நடவடிக்கை பிரிவு (Operasi Pencegahan) செயல்பாட்டு உதவி இயக்குநர் உதவி கமிஷனர் சே ஹனிசா சே செனாபி, அதே பிரிவின் முதன்மை உதவி இயக்குநர் (ஆதரவு வள ஒருங்கிணைப்பு) பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
“தேசிய நிதி குற்றத் தடுப்பு மையம் (NFCC) பிரதமர் துறையின் ஒருங்கிணைந்த செயல்பாட்டு இயக்குநராக இருந்த உதவி கமிஷனர் அன்னாஸ் சுலைமான், வங்சா மாஜு மாவட்ட போலிஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்,” என்று அவர் கூறினார்.
இதனுடன், புத்ராஜாயா மாவட்ட துணை போலீஸ் தலைவர் சூப்பிரிண்டெண்ட் அஸாரி மிஸ்கோன், சிபு மாவட்ட போலீஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புக்கிட் அமான் மேலாண்மை துறையின் பயிற்சி பிரிவு (பட்ஜெட்/நாசிரான்) தலைமை பயிற்சி அதிகாரி சூப்பிரிண்டெண்ட் ஜோஹர் தசுகி, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் புலாபோல் ஏர் ஹிதாம் பயிற்சி மையத்தின் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
“தவாவ் மாவட்ட துணை போலிஸ் தலைவர் சூப்பிரிண்டெண்ட் சாம்பின் பியூ, சபா மாநிலத்தின் போஃபோர்ட் மாவட்ட போலீஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், சபாக் பெர்ணாம் மாவட்ட துணை போலீஸ் தலைவர் டெபுட்டி சூப்பிரிண்டெண்ட் காலித் முகமட், முஆல்லிம் மாவட்ட போலீஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனுடன் அவர் சூப்பிரிண்டெண்ட் பதவியிலும் பொறுப்பேற்று செயல்படுகிறார்,” என்று அவர் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 11, 2026, 7:59 pm
கம்போங் பாண்டான் மதரஸாவில் வசதிக் குறைந்தவர்களுக்கு ரமலான் உதவி: முக்மின் வழங்கியது
March 11, 2026, 7:39 pm
3ஆர் பிரச்சினைகளை இன்னும் கடுமையாக கையாள அரசாங்கம் சட்டங்களை திருத்தலாம் அல்லது வரையலாம்: ஃபஹ்மி
March 11, 2026, 7:10 pm
மலேசிய - இந்தியா மகளிர் தொழில் முனைவோர், இளைஞர்களுடனான ஒத்துழைப்புகள் வலுப்பெற வேண்டும்: ஹேமலா
March 11, 2026, 5:25 pm
சரவாக்கில் 10 சதவீத காவல்துறையினருக்கு மட்டுமே ஹரிராயா விடுப்பு
March 11, 2026, 5:13 pm
காணாமல் போன தஹ்பிஸ் மாணவி கண்டுபிடிக்கப்பட்டார்
March 11, 2026, 5:02 pm
