செய்திகள் மலேசியா
பாலஸ்தீன மக்களுக்கு மீடியா பிரிமாவின் நிதி உதவி: 30 இலட்சம் ரிங்கிட் ஒப்படைப்பு
புத்ராஜெயா:
மீடியா பிரிமா நிறுவனம் பொதுமக்களிடமிருந்து திரட்டிய 30 இலட்சம் ரிங்கிட் நிதியை பாலஸ்தீன மக்களுக்கான மனிதாபிமான உதவி நிதிக்காக வெளியுறவு அமைச்சகத்திடம் ஒப்படைத்துள்ளது.
இந்த நிதி, பாலஸ்தீன மக்களுக்கான, மனிதாபிமான உதவி நம்பிக்கை கணக்கின் மூலம் வழங்கப்பட்டது.
மீடியா பிரிமா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ முஹம்மத் ரஃபீக் ரசாலி கூறுகையில், பாலஸ்தீன மக்களின் போராட்டம் நிறுவனத்திற்கு மிகவும் நெருக்கமானதாக இருப்பதாக தெரிவித்தார்.
பாலஸ்தீன மனிதாபிமான நிதி பத்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 2 கோடி ரிங்கிட் தொகைக்கு மேற்பட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த நிதி திரட்டலில் நிறுவனம் ஒரு வழிகாட்டியாக மட்டுமே செயல்பட்டதாகவும், உண்மையான பங்களிப்பாளர்கள் மலேசிய மக்களே என்றும் அவர் குறிப்பிட்டார். போர் காரணமாக பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதில் மலேசியர்கள் மிகுந்த மனப்பூர்வத்துடன் பங்களித்து வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த நிதிக்கான காசோலை இன்று விஸ்மா புத்ராவில் வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹம்மத் ஹசனிடம் ஒப்படைக்கப்பட்டது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 11, 2026, 7:59 pm
கம்போங் பாண்டான் மதரஸாவில் வசதிக் குறைந்தவர்களுக்கு ரமலான் உதவி: முக்மின் வழங்கியது
March 11, 2026, 7:39 pm
3ஆர் பிரச்சினைகளை இன்னும் கடுமையாக கையாள அரசாங்கம் சட்டங்களை திருத்தலாம் அல்லது வரையலாம்: ஃபஹ்மி
March 11, 2026, 7:10 pm
மலேசிய - இந்தியா மகளிர் தொழில் முனைவோர், இளைஞர்களுடனான ஒத்துழைப்புகள் வலுப்பெற வேண்டும்: ஹேமலா
March 11, 2026, 5:25 pm
சரவாக்கில் 10 சதவீத காவல்துறையினருக்கு மட்டுமே ஹரிராயா விடுப்பு
March 11, 2026, 5:13 pm
