செய்திகள் மலேசியா
காணாமல் போன தஹ்பிஸ் மாணவி கண்டுபிடிக்கப்பட்டார்
சுக்காய்:
கம்போங் மெராகா பெரிஸ், கிஜால் அருகே உள்ள தனது வீட்டில் இருந்து கடந்த திங்கட்கிழமை வெளியேறிய பின்னர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட தஹ்பிஸ் மையத்தைச் சேர்ந்த ஒரு மாணவி, நேற்று மாலை பாதுகாப்பாக கண்டுபிடிக்கப்பட்டார்.
அந்த மாணவியின் தந்தை முஹம்மத் யுலிசான் யூசோப், 41, அவரது மகள் அரியானா அதாவிய்யா, (வயது 17), நேற்று மாலை சுமார் 7 மணியளவில் அவர்களின் வீட்டிலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிஜாலில் ஒரு கடையில் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டார் என்றார் அவர்.
மூன்று சகோதரங்களில் மூத்தவரான அவரது மகள், திங்கட்கிழமை அசர் தொழுகைக்குப் பிறகு வீட்டில் இல்லாததை அவரது மனைவி கவனித்ததாக அவர் தெரிவித்தார்.
“கெர்த்தே பகுதியில் உள்ள ஒரு தஹ்பிஸ் மையத்தில் கல்வி பயிலும் என் மகள் பாதுகாப்பாகவும் நலமாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். எல்லாப் புகழும் இறைவனுக்கே. என் மகளைக் கண்டுபிடித்த பொதுமக்கள் அவரைச் சுக்காயில் உள்ள சுல்தான் அஹ்மத் பள்ளிவாசலுக்கு நோன்பு திறக்க அழைத்து சென்றனர்.
“என் மகளின் பாதுகாப்பிற்காக தகவல்கள் வழங்கி உதவிய கிராம மக்கள், பொதுமக்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன்,” என்று அவர் இன்று அவர் தெரிவித்தார்.
முஹம்மத் யுலிசான் மேலும் கூறுகையில், கடந்த வாரம் அவரது பாட்டி இறந்ததையடுத்து அரியானா அதாவிய்யா மனஅழுத்தம் பிரச்சினையை எதிர்கொண்டதாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.
“அவர் வீட்டிற்கு திரும்பாமல் இருந்ததால் குடும்பத்தினருக்குக் கவலை ஏற்பட்டது. அதனால் நான் போலிஸில் புகார் அளித்தேன். பின்னர் அவர் நேற்று கண்டுபிடிக்கப்பட்டார்,” என்று அவர் கூறினார்.
கெமாமான் மாவட்ட போலிஸ் தலைவர், சூப்பிரிண்டெண்ட் முஹம்மத் ராசி ரோஸ்லி தொடர்பு கொண்டபோது, தஹ்பிஸ் மைய மாணவி காணாமல் போனது குறித்து போலீசுக்கு புகார் கிடைத்ததை உறுதிப்படுத்தினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 11, 2026, 7:59 pm
கம்போங் பாண்டான் மதரஸாவில் வசதிக் குறைந்தவர்களுக்கு ரமலான் உதவி: முக்மின் வழங்கியது
March 11, 2026, 7:39 pm
3ஆர் பிரச்சினைகளை இன்னும் கடுமையாக கையாள அரசாங்கம் சட்டங்களை திருத்தலாம் அல்லது வரையலாம்: ஃபஹ்மி
March 11, 2026, 7:10 pm
மலேசிய - இந்தியா மகளிர் தொழில் முனைவோர், இளைஞர்களுடனான ஒத்துழைப்புகள் வலுப்பெற வேண்டும்: ஹேமலா
March 11, 2026, 5:25 pm
சரவாக்கில் 10 சதவீத காவல்துறையினருக்கு மட்டுமே ஹரிராயா விடுப்பு
March 11, 2026, 5:02 pm
