செய்திகள் மலேசியா
“நாட்டின் நிதிநிலையை ஆய்வு செய்ய வெள்ளிக்கிழமை சிறப்பு அமைச்சரவை நடைபெறவுள்ளது”: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் அறிவிப்பு
புத்ராஜெயா:
மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்துள்ள மோதல் நிலைமையைத் தொடர்ந்து, நாட்டின் நிதிநிலையை ஆய்வு செய்ய சிறப்பு அமைச்சரவை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இந்த கூட்டத்தில் நாட்டின் நிதிநிலை, தற்போதைய நிலவரங்கள், அந்த மோதலின் பொருளாதார தாக்கங்களை அரசு எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார் அவர்.
மேற்கு ஆசிய நிலைமை வேகமாக மாறி வருவதால் அதை நெருக்கமாக ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் மார்ச் 13ஆம் தேதி காலை சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த கூட்டம் நாட்டின் நிதிநிலையை மதிப்பீடு செய்து, தற்போதைய சூழ்நிலையை கண்காணித்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க அமைச்சரவைக்கு வாய்ப்பு அளிக்கும் என்றும் அவர் கூறினார்.
இதற்கு முன்பும் பல அறைகூவல்களை நாடு வெற்றிகரமாக சமாளித்துள்ளது என்றும், அரசுத் தலைவர்கள், அரசு பணியாளர்கள், தனியார் துறை, பொதுமக்கள் ஒத்துழைப்புடன் தற்போதைய பிரச்சினைகளையும் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையை பிரதமர் வெளிப்படுத்தினார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 11, 2026, 7:59 pm
கம்போங் பாண்டான் மதரஸாவில் வசதிக் குறைந்தவர்களுக்கு ரமலான் உதவி: முக்மின் வழங்கியது
March 11, 2026, 7:39 pm
3ஆர் பிரச்சினைகளை இன்னும் கடுமையாக கையாள அரசாங்கம் சட்டங்களை திருத்தலாம் அல்லது வரையலாம்: ஃபஹ்மி
March 11, 2026, 7:10 pm
மலேசிய - இந்தியா மகளிர் தொழில் முனைவோர், இளைஞர்களுடனான ஒத்துழைப்புகள் வலுப்பெற வேண்டும்: ஹேமலா
March 11, 2026, 5:25 pm
சரவாக்கில் 10 சதவீத காவல்துறையினருக்கு மட்டுமே ஹரிராயா விடுப்பு
March 11, 2026, 5:13 pm
காணாமல் போன தஹ்பிஸ் மாணவி கண்டுபிடிக்கப்பட்டார்
March 11, 2026, 5:02 pm
