நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசாங்கம் ரோன் 95 பெட்ரோல் விலையை லிட்டருக்கு 1.99 ரிங்கிட்டாக நிலை நிறுத்தும்: பிரதமர்

புத்ராஜெயா:

தகுதியுள்ள மலேசியர்களுக்கான பூடி 95 மானியத் திட்டத்தின் கீழ், அரசாங்கம் ரோன் 95 பெட்ரோலின் விலையை லிட்டருக்கு 1.99 ரிங்கிட்டாக நிலை நிறுத்தும்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், மலேசியாவில் மானிய விலையை குறைந்தபட்சம் மே மாதம் வரை பராமரிக்க போதுமான பெட்ரோல் விநியோகம்உள்ளது.

கடந்த மார்ச் 9 அன்று, கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 100  அமெரிக்க டாலரைத் தாண்டியது. நேற்று அது பீப்பாய்க்கு 90 அமெரிக்க டாலராக சற்று குறைந்தது.

ஆனால் பெட்ரோனாஸ், அரசாங்க நிர்வாகத்திற்கு  எனது நன்றி.

பூடி 95 இன் கீழ் ரோன் 95 பெட்ரோலின் போதுமான விநியோகத்தை உறுதிசெய்து லிட்டருக்கு 1.99 ரிங்கிட் விலையை  அரசாங்கம் பராமரிக்க முடியும்.

இது மிகவும் பெருமைப்பட வேண்டிய ஒன்று. ஏனென்றால்  அரசாங்கம் பெட்ரோனாஸுடன் சரிபார்த்தபோது, ​​பெட்ரோலியப் பொருட்களின் விநியோகம் குறைந்தபட்சம் மே 2026 வரை நீடிக்கும் என்பதைக் கண்டறிந்தோம், என்று நிதியமைச்சராகவும் இருக்கும் டத்தோஶ்ரீ அன்வார் கூறினார்.

மக்களின் நலனே அரசாங்கத்தின் முன்னுரிமை என்றும், எண்ணெய் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வின் முழு தாக்கத்திலிருந்து மலேசியர்களைப் பாதுகாப்பது என்று அவர் உறுதி செய்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset