செய்திகள் உலகம்
மடகாஸ்கரில் அரசியல் மாற்றம்: பிரதமர் உள்ளிட்ட ஒட்டுமொத்த அமைச்சரவையும் அதிரடியாக நீக்கம்
லுசாகா (சாம்பியா):
மடகாஸ்கர் நாட்டு அதிபர் மைக்கேல் ராண்ட்ரியானிரினா, அந்நாட்டின் பிரதமர் ஹெரின்ட்சலமா ராஜாஓனரிவேலோவையும், ஒட்டுமொத்த அமைச்சரவையையும் அதிரடியாகப் பணிநீக்கம் செய்துள்ளார்.
திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்தத் திடீர் நடவடிக்கைக்கான தெளிவான காரணங்கள் அதிபர் மாளிகையிலிருந்து இதுவரை வெளியிடப்படவில்லை.
இது குறித்து அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் ஹாரி லாரன்ட் ரஹாஜசன் விடுத்துள்ள அறிக்கையில், "அரசியல் சாசன விதிமுறைகளின்படி, மிக விரைவில் புதிய பிரதமர் நியமிக்கப்படுவார்," என்று தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் மக்கள் போராட்டத்தால் முந்தைய அதிபர் ஆண்ட்ரி ராஜோலினா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, மைக்கேல் ராண்ட்ரியானிரினா பொறுப்பேற்றார்.
மேலும், 'மடகாஸ்கர் குடியரசை மறுசீரமைத்தல்' எனும் இலக்கின் கீழ், வரும் 2027-ஆம் ஆண்டில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 10, 2026, 4:24 pm
நெதன்யாஹு உயிரிழந்துவிட்டாரா?: இஸ்ரேல் ஊடகம் கடும் மறுப்பு
March 10, 2026, 4:02 pm
“வான்வெளி பாதுகாப்பில் தளர்ச்சி இல்லை”: ஈரானிடம் துருக்கி கடும் எச்சரிக்கை
March 10, 2026, 3:29 pm
“போர் முடிவை நாங்களே தீர்மானிப்போம்”: டிரம்புக்கு பதிலடி கொடுத்த அப்பாஸ் அரக்சி
March 10, 2026, 3:14 pm
மனைவியின் சகோதரியை பாலியல் வன்முறைக்குள்ளாக்கிய ஆடவர் கைது
March 10, 2026, 6:17 am
