செய்திகள் உலகம்
“வான்வெளி பாதுகாப்பில் தளர்ச்சி இல்லை”: ஈரானிடம் துருக்கி கடும் எச்சரிக்கை
அங்காரா:
துருக்கியின் வான்வெளியை எந்த வகையிலும் மீறுவது மன்னிக்க முடியாதது என துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன், ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனிடம் தெரிவித்தார்.
ஈரான் கோரிக்கையின் பேரில் நடைபெற்ற தொலைபேசி உரையாடலின்போது அவர் இந்த கருத்தை வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னதாக, ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஒன்று துருக்கியின் தென்கிழக்கு பகுதியான காசியாந்தெப் வான்வெளியில் நுழைந்ததாகவும், அதை வட அட்லாண்டிக் பாதுகாப்பு கூட்டணியின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக தடுத்ததாகவும் துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. இதில் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை.
தங்களுக்கு தொடர்பில்லாத மோதல் காரணமாக துருக்கி தற்போது பாதிக்கப்படுவதாகவும், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தயார் என்றும் எர்டோகன் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த ஈரான் அதிபர், துருக்கி வான்வெளியில் நுழைந்த ஏவுகணை ஈரானிலிருந்து அனுப்பட்டது அல்ல என கூறியதுடன், இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.
மேலும் தென் ஈரானில் பெண்கள் பள்ளியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு, எர்டோகன் தனது இரங்கலைத் தெரிவித்தார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 10, 2026, 5:54 pm
மடகாஸ்கரில் அரசியல் மாற்றம்: பிரதமர் உள்ளிட்ட ஒட்டுமொத்த அமைச்சரவையும் அதிரடியாக நீக்கம்
March 10, 2026, 4:24 pm
நெதன்யாஹு உயிரிழந்துவிட்டாரா?: இஸ்ரேல் ஊடகம் கடும் மறுப்பு
March 10, 2026, 3:29 pm
“போர் முடிவை நாங்களே தீர்மானிப்போம்”: டிரம்புக்கு பதிலடி கொடுத்த அப்பாஸ் அரக்சி
March 10, 2026, 3:14 pm
மனைவியின் சகோதரியை பாலியல் வன்முறைக்குள்ளாக்கிய ஆடவர் கைது
March 10, 2026, 6:17 am
