நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

2026 கிராஸ்ஹோப்பர் கிண்ணத்தை சிவசங்கரி வென்றார்

கோலாலம்பூர்:

நாட்டின் முதல் நிலை ஸ்குவாஷ் வீராங்களையான எஸ். சிவசங்கரி 2026 கிராஸ்ஹோப்பர் கிண்ணத்தை வென்று சாதித்துள்ளார்.

கிராஸ்ஹோப்பர் கிண்ண ஸ்குவாஷ் போட்டி சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் நடைபெற்றது.

இதில்  தோல்வியின் விளிம்பிலிருந்து மீண்டு வந்து தனது அசாதாரணமான போராட்ட குணத்தை வெளிப்படுத்தி அவர் சாம்பியன் பட்டம் வென்றார்.

62 நிமிடங்கள் நீடித்த கடுமையான இறுதிப் போட்டியில், ஜப்பானிய வீராங்கனை சடோமி வதனாபேவை 15-13, 5-11, 5-11, 11-7, 11-8 என்ற செட்களின்  3-2 என்ற மொத்த புள்ளிக் கணக்கில் தோற்கடித்தார்.

முதல் செட்டை வென்றபோதிலும், வதனாபே இரண்டாவது, மூன்றாவது செட்களை வென்றதால் சிவசங்கரி 1-2 என்ற கணக்கில் பின்தங்கியது.

இருப்பினும், சிவசங்கரி தனது மன உறுதியால் மீண்டு வந்து கடைசி இரண்டு செட்டுகளை வென்று, தங்கப் பிரிவு சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset