நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இஸ்ரேலை நோக்கி புதிய ஏவுகணை தாக்குதல் தொடங்கியது ஈரான்

பைதுல்மக்டிஸ்: 

இஸ்லாமிய புரட்சிப் பாதுகாப்பு படை (IRGC) இஸ்ரேலை நோக்கி புதிய ஏவுகணை தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

அந்த ஏவுகணைகள் ஈரானிலிருந்து செலுத்தப்பட்டதாகவும், அவற்றை தடுக்க பாதுகாப்பு அமைப்புகள் செயல்பாட்டில் உள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியது.

தாக்குதல் குறிவைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்குக் கைப்பேசி வழியாக முன்கூட்டியே எச்சரிக்கை அனுப்பப்பட்டதாக ராணுவம் தெரிவித்தது.

“பாதுகாப்பு அமைப்புகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன,” என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

நேற்று, IRGC “Operasi Janji Benar” என்ற நடவடிக்கையின் 22வது அலை தாக்குதலை மேற்கொண்டு, பாரசீக வளைகுடா முதல் டெல் அவீவ் வரை அமெரிக்க, இஸ்ரேல் நிலைப்பாடுகளைக் குறிவைத்து Khorramshahr-4, Khaibar, Fattah ராக்கெட்டுகளை பயன்படுத்தியது.

IRGC வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், இந்த நடவடிக்கை வெள்ளிக்கிழமை மாலை “Ya Hossein ibn Ali (AS)” என்ற குறியீட்டு பெயரில் தொடங்கப்பட்டதாகவும், மினாப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஈரான் குழந்தைகள் உயிரிழந்த தாக்குதலுக்கான பதிலடி எனவும் தெரிவிக்கப்பட்டது.

செலுத்தப்பட்ட ஏவுகணைகளில் ஒன்றான Khorramshahr-4 மிகவும் கனமான ராக்கெட் ஆகும். இது இரண்டு டன் எடையுள்ள போர்தலை (warhead), Mach 14-ஐ விட அதிக வேகத்துடன் பாயக்கூடியது. இது “ஈரான் நாட்டின் கொடிய எதிரிகளின் இலக்குகளை” குறிவைத்து செலுத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

பாரசீக வளைகுடா, டெல் அவீவ், பென் குரியான் விமான நிலையம், ஹைஃபா நகரில் உள்ள அமெரிக்க, இஸ்ரேல் ராணுவ மையங்களும் தாக்குதலுக்கான இலக்குகளாக இருந்தன.

கடந்த ஏழு நாட்களில் பயன்படுத்தப்பட்ட ராக்கெட்டுகள் பெரும்பாலும் 2012 முதல் 2014 வரை தயாரிக்கப்பட்டவை என IRGC-இன் ஒரு மூத்த அதிகாரி Fars செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ஈரான் இன்னும் தனது புதிய  ராக்கெட் அமைப்புகளை முழுமையாக பயன்படுத்தவில்லை என்றும், நீண்டகால போரை எதிர்கொள்ள பல்வேறு ராக்கெட் அமைப்புகளை வடிவமைத்து தயாரிக்கும் பணியில் நாட்டின் பாதுகாப்பு தொழில் துறை தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

“அடுத்த சில நாட்களில் மேலும் மேம்பட்ட, அரிதாக பயன்படுத்தப்படும் நீண்ட தூர ராக்கெட்டுகளைக் கொண்டு புதிய தாக்குதல் முறைகள் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல், கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க, இஸ்ரேல் ஈரானை நோக்கி புதிய வான்தாக்குதலைத் தொடங்கியதைத் தொடர்ந்து நடைபெற்றதாக கூறப்படுகிறது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset