நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஈரான் தாக்குதல் முயற்சி தோல்வி: ஏவுகணை தாக்குதலை தடுத்த சவுதி

ரியாத்: 

அமெரிக்கா (US) படையினர் தங்கியுள்ள வான்படை தளத்தை நோக்கி செலுத்தப்பட்ட ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையைத் தாங்கள் வெற்றிகரமாகத் தடுத்து அழித்ததாகச் சவுதி அரேபியா இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

 “ரியாத் தலைநகரத்தின் தென்கிழக்கில் உள்ள பிரின்ஸ் சுல்தான் வான்படை தளம் நோக்கி செலுத்தப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாகத் ‘தடுக்கப்பட்டு அழிக்கப்பட்டது’,” என்று சவுதி அரேபிய பாதுகாப்பு அமைச்சகம் X தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மற்றொரு சம்பவத்தில், சவுதியின் அதிகாரப்பூர்வ செய்தி ஊடகம் பாதுகாப்பு அமைச்சகத்தின் பேச்சாளரை மேற்கோள் காட்டி, ஐக்கிய அரபு அமீரகம் (UAE) எல்லைக்கு அருகிலுள்ள முக்கிய எண்ணெய் களத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் முயற்சி தடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

“ஷெய்பா எண்ணெய் களம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் முயற்சியில் பயன்படுத்தப்பட்ட ஆறு ட்ரோன்கள் வெற்றிகரமாகத் தடுக்கப்பட்டு அழிக்கப்பட்டன,” என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 28 அன்று அமெரிக்கவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் இஸ்லாமிய குடியரசை தாக்கியதையடுத்து தொடங்கிய போருக்குப் பிறகு, ஈரான் இஸ்ரேல், வளைகுடா நாடுகளை நோக்கி ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவுதி அரேபியா, இந்த வார தொடக்கத்தில் குறைந்தது இரண்டு ட்ரோன் தாக்குதல்கள் நடந்ததாகவும், அவை நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள ராஸ் தனூரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைக் குறிவைத்து நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset