நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசாங்கத்தை சீர்குலைப்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுங்கள்: ஜாஹித்

கோலாலம்பூர்:

சில கட்சிகள் அரசாங்கத்தை சீர்குலைக்க சர்வதேச ஊடகங்கள் உட்பட வெளிநாட்டு செல்வாக்கைப் பயன்படுத்தி நாசவேலைகளில் ஈடுபடுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் மீது அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹித் ஹமிடி இதனை வலியுறுத்தினார்,

இது இன்னும் அதிகாரிகளால் விசாரணையில் இருந்தாலும், கவனிக்கப்படாவிட்டால் அரசியல் நிலைத்தன்மையை  சீர்குலைக்கும்.

இந்த விவகாரம் விசாரணையில் உள்ளது, எனவே விசாரணையை அதிகாரிகளிடம் விட்டுவிடுவோம்.

எனக்கு, இந்த விவகாரம் காட்டுத் தீ போல் பரவாமல் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஊடகங்களையும் வெளி கட்சிகளையும் பயன்படுத்தி நம் நாட்டை சேதப்படுத்துபவர்களால் அரசியல் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படக்கூடாது என்று அவர் இன்று மெனாரா ஃபெல்டாவில் உள்ள ஃபெல்டா ஊழியர்களை சந்தித்த பிறகு கூறினார்.

ஃபெல்டா தலைவர் டத்தோஸ்ரீ அகமது ஷபரி சிக்கும் உடனிருந்தார்.

இந்த வார மக்களவை அமர்வின் போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஊடகங்கள், சர்வதேச நிறுவனங்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி உள்ளூர்வாசிகளால் ஆதரிக்கப்படும் அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியை வெளிப்படுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset