நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உழைப்பில்லாமல் உயர்வு இல்லை: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

உழைப்பில்லாமல் உயர்வு இல்லை என்று மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தியில் கூறினார்.

வாழ்வில் உயர்ந்த இடத்தை அடைவதுதான் அனைவரின் கனவும், குறிக்கோளும்.

அந்த உயர்வை அடைவதற்கான ஒரே வழி உண்மையான உழைப்பே ஆகும்.

உழைப்பால் உயர்வு என்பது ஒரு சொற்றொடர் மட்டும் அல்ல; அது வாழ்வின் மெய்ப்பொருள்.

திருக்குறளில் வள்ளுவர்
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்
என்று, உழைப்பின் பெருமையை உயர்த்திக் கூறுகிறார்.

தன்னால் உழைத்து வாழ்பவர்களே உண்மையில் வாழ்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

பாரதியார் தனது கவிதைகளில் உழைப்பைத் தெய்வமாகக் கொண்டாடி, “உழைப்பது உயர்வதற்கே” என்ற எண்ணத்தை நமக்கு ஊட்டுகிறார்.

உழைப்பில்லாமல் உயர்வு இல்லை, உழைப்போடு இணைந்த தன்னம்பிக்கையே வெற்றியின் அடித்தளம்.

உழைப்பு மனிதனை மட்டும் உயர்த்துவதில்லை, சமூகத்தையும் உயர்த்துகிறது.

விவசாயி முதல் தொழிலாளர் வரை, கைவினைஞர் முதல் அறிவியல் வல்லுநர் வரை ஒவ்வொருவரின் உழைப்பும் உலகை முன்னேற்றியுள்ளது.

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள், கவலை உணக்கில்லை ஒத்துக்கொள் என்பதே நமது வாழ்வியல் உண்மை.

கடின உழைப்பை மூலதனமாகக் கொண்டு, தன்னம்பிக்கையுடன் முன்னேறி வரும் அனைவருக்கும் மனமார்ந்த தொழிலாளர் தின நல்வாழ்த்துகள்.

உங்கள் உழைப்பின் வியர்வை வெற்றியின் முத்தாக மாறி, வாழ்வில் உயர்ந்த இடத்தை அடைய எல்லா நலன்களும் கிடைக்கட்டும் என தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset