செய்திகள் மலேசியா
தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுவோம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
கோலாலம்பூர்:
உலகம் எங்கும் தொழிலாளர்களின் உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் மதிப்பளித்துக் கொண்டாடப்படும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அனைத்துத் தொழிலாளர்களுக்கும் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் தொழிலாளர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த தொழிலாளர் தினத்தில் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.
இதற்கு மஇகாவும் தனது பங்குக்கு களத்தில் இறங்கி இந்திய சமூகத்திற்கு பல உதவிகள் செய்து வருகிறது.
தொழிலாளர்களைப் பொறுத்தவரை அவர்களின் உழைப்பே அவர்களின் மூலதனம். அதன் மூலமே அவர்களின் வாழ்க்கையும் சிறப்பாக உயர முடியும்.
எந்தத் தொழிலைச் செய்பவராக இருந்தாலும், அவரையும் அவர் செய்யும் தொழிலையும் நாம் மதிக்க வேண்டும். கௌரவிக்க வேண்டும்.
எந்தத் தொழிலையும் நாம் தாழ்வாகவோ, தரக் குறைவாகவோப் பார்க்கக் கூடாது.
இன்றைக்கு உலகில் உள்ள செல்வச் செழிப்புகள் அனைத்தும் பலதரப்பட்ட தொழிலாளர்களின் கடுமையான உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் உருவானது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
இன்றைக்கு நமது இந்திய சமூகத்தில் பலர் செல்வச் செழிப்போடும், பல வசதிகளோடும், உயர்ந்த தொழில் நிபுணர்களாகவும் இருக்கலாம்.
ஆனால் அதற்கான அடிப்படைக் காரணம் நமது மூதாதையர்கள் சாதாரண தொழிலாளர்களாக, ரப்பர் தோட்டங்களிலும், துப்புறவுத் துறைகளிலும் வழங்கிய உழைப்புதான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.
நாட்டிலுள்ள தொழிலாளர் சமூகத்தின், குறிப்பாக இந்திய சமுதாயத் தொழிலாளர்களின் நலன்களை மஇகா, அரசாங்கத்தின் உதவியோடு தொடர்ந்து பாதுகாக்கும். அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை வழங்கும்.
அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கவும் நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம் என இந்த தொழிலாளர் தினத்தில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் உறுதி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2026, 11:42 pm
உழைப்பில்லாமல் உயர்வு இல்லை: டத்தோஸ்ரீ சரவணன்
April 30, 2026, 6:09 pm
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மகிழ்ச்சியான செய்திகள்; நாளை பிரதமர் அறிவிப்பார்: டத்தோஸ்ரீ ரமணன்
April 30, 2026, 5:50 pm
குழந்தையைக் கைவிட்ட குற்றத்தில் தனித்து வாழும் 1,500 ரிங்கிட் அபராதம்
April 30, 2026, 5:09 pm
தங்காக் கொலை வழக்கு: மலாக்கா ஹோட்டல்களில் பதுங்கியிருந்த 3 பேர்
April 30, 2026, 4:46 pm
