நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உணவகத் துறைக்கான அந்நிய தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சினைக்கு அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்: டத்தோ மோகன்

கோலாலம்பூர்:

உணவகத் துறைக்கான அந்நிய தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சினைக்கு அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்.

சுக்கிம் தலைவர் டத்தோ டி.மோகன் இதனை கூறினார்.

உலக புகழ் பெற்ற சரவணபவன் உணவகத்தின் 7ஆவது கிளை தலைநகர் ஜாலான் ஈப்போவில் திறப்பு விழா கண்டது.
இவ்வேளையில் அதன் உரிமையாளர் சிவக்குமாருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கிட்டத்தட்ட 30 நாடுகளில் 160க்கும் மேற்பட்ட சரவணபவன் உணவகம் செயல்பட்டு வருகின்றன.

குறிப்பாக மலேசியாவில் இது ஏழாவது கிளையாகும்.

இதற்கு எல்லாம் முக்கிய காரணம் சரவணபவன் உணவகம் தரமான உணவு தான் முக்கிய காரணம்.

சைவ உணவகமாக இருந்தாலும் மக்கள் விரும்பும் உணவகமாக சரவணபவன் உள்ளது.

ஆக சரவணபவன் உணவகம் தொடர்ந்து வெற்றியடைய எனது வாழ்த்துகள் என்று டத்தோ டி. மோகன் கூறினார்.

இதனிடையே உணவகத் துறையில் அதிகமான இந்தியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் அவர்கள் நீண்டக் காலமாக அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

வரி செலுத்தி முறையாக வியாபாரம் செய்பவர்களுக்கு தொழிலாளர்களை அரசு விரைந்து வழங்க வேண்டும்.

இதுவே எனது கோரிக்கையாகும் என்று டத்தோ டி. மோகன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset