செய்திகள் மலேசியா
சொஸ்மா சட்டத்தின் கீழ் சிறார்களை குற்றப் புலனாய்வுத் துறை கைது செய்யவில்லை: டத்தோ குமார்
கோலாலம்பூர்:
சொஸ்மா சட்டத்தின் கீழ் சிறார்களை குற்றப் புலனாய்வுத் துறை கைது செய்யவில்லை.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் இதனை கூறினார்.
கடந்த பிப்ரவரி 15 அன்று சொஸ்மா சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் துறை சிறார்களைக் கைது செய்யவோ அல்லது தடுத்து வைக்கவோ இல்லை.
சுவாராம் குற்றம் சாட்டிய தேதியில் 17 வயது நபர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டதற்கான எந்தப் பதிவும் இல்லை என்று மதிப்பாய்வில் கண்டறியப்பட்டது,
இந்த விளக்கம் குறிப்பாக குற்றப் புலனாய்வுத் துறையின் நடவடிக்கைகளைக் குறிக்கிறது.
அதே வேளையில் கடந்த்அ பிப்ரவரி 15 ஆம் தேதி 17 வயது சிறுவன் மீது குற்றம் சாட்டப்பட்டதாக எந்த பதிவும் இல்லை.
இருப்பினும் சொஸ்மாவின் கீழ் கைது செய்து விசாரிக்க அதிகார வரம்பைக் கொண்ட போலிஸ் பிற துறைகள் உள்ளன என்று அவர் கூறினார்.
முன்னதாக, தொடர்புடைய சட்டத்தின் கீழ் குறைந்தது ஆறு சிறார்களாவது தற்போது காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுவாராம் கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 13, 2026, 3:04 pm
எம்ஏசிசி தலைமை இயக்குநராக டத்தோஶ்ரீ அப்துல் ஹலில் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றார்
May 13, 2026, 3:04 pm
விடுதியில் மயங்கி விழுந்த முதலாம் படிவ மாணவர் உயிரிழந்தார்
May 13, 2026, 2:27 pm
தொழில்நுட்பமே நாட்டின் எதிர்கால அஸ்திவாரம்: துணை நிதி அமைச்சர் லியூ சின் தோங்
May 13, 2026, 12:01 pm
வரலாற்றின் கறுப்புப் பக்கமான மே 13: பன்முகத்தன்மையே நாட்டின் பலம்
May 13, 2026, 11:50 am
இந்து ஆலய விவகாரத்தில் பிளவுகளை ஏற்படுத்த வேண்டாம்: பிரதமருக்கு குணராஜ் ஆதரவு
May 13, 2026, 11:49 am
லெபனானில் ட்ரோன் வெடித்ததில் மலேசிய ராணுவ வீரர்கள் யாரும் காயமடையவில்லை: காலிட் நோர்டின்
May 13, 2026, 11:46 am
ஜோ லோ, டிரம்ப்பிடம் மன்னிப்புக் கோரியதாகத் தகவல் வெளியாகியுள்ளது
May 13, 2026, 10:08 am
