செய்திகள் இந்தியா
வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வரும் 1 கோடி இந்தியர்களை மீட்கும் பணி விரைவில் துவங்கும்: இந்திய அரசு அறிவிப்பு
புதுடெல்லி:
வளைகுடாவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், அங்கு வசிக்கும் சுமார் 1 கோடி இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து ஒன்றிய அரசு கவலை தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 39 லட்சம் இந்தியர்களும், சவுதி அரேபியாவில் 27.5 லட்சம் பேரும், குவைத்தில் 10.1 லட்சம் பேரும், கத்தாரில் 8.3 லட்சம் பேரும், ஓமனில் 6.62 லட்சம் பேரும், பஹ்ரைனில் 3.47 லட்சம் பேரும் வசித்து வருகின்றனர்.
குறிப்பாக ஈரானில் சுமார் 10,000 இந்தியர்கள் உள்ள நிலையில், அங்கு செல்போன், இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் அவர்களைத் தொடர்பு கொள்வதில் சிக்கல் நீடிக்கிறது.
ஈரானில் சிக்கியுள்ள சுமார் 10,000 இந்திய மாணவர்களை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கையை தொடங்கியுள்ளது. டெஹ்ரான், சிராஸ், யாஸ்ட் நகரங்களில் பயிலும் காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் அர்மேனியா வழியாகத் தரைவழியாக மீட்கப்பட்டு வருகின்றனர்.
துபாய், அபுதாபி விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான இந்தியப் பயணிகள் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் தவித்து வரும் நிலையில், அவர்கள் பாதுகாப்பாகத் தங்குவதற்கு இந்தியத் தூதரகங்கள் ஏற்பாடு செய்துள்ளன.
இந்நிலையில் பிரதமர் மோடி, பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை குழுவின் அவசரக் கூட்டத்தைக் கூட்டினார். அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடந்த இந்த ஆலோசனையில், வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
மேலும் வளைகுடா நாடுகளில் நிலவும் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வரவும், அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், வான்வழிப் போக்குவரத்து சீரானதும், சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வரத் தேவையான சிறப்பு விமானங்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 13, 2026, 5:31 pm
ஆசியாவின் சிறந்த உணவகங்கள் பட்டியல்: 7 இந்திய உணவகங்கள் இடம்பிடித்து சாதனை
March 12, 2026, 5:32 pm
ஹார்முஸ் நீரிணை விவகாரம்: இந்திய கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் கட்டுப்பாடு
March 12, 2026, 5:30 pm
நள்ளிரவில் தீ விபத்து: டெல்லி மேற்கு பகுதியில் மீன் சந்தை தீக்கிரை
March 12, 2026, 11:03 am
விஷ வாயுக் கசிவு: கழிவுநீர் குழாயில் உயிரிழந்த இரு பணியாளர்கள்
March 12, 2026, 10:35 am
காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா மீது கொலை முயற்சி: துப்பாக்கிச் சூடு தவிர்க்கப்பட்டது
March 11, 2026, 11:47 pm
தாய்லாந்தில் ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்து விபத்து: பயணிகள் பத்திரமாக மீட்பு
March 11, 2026, 10:57 am
மேற்கு ஆசிய மோதலின் தாக்கம்: விமான எரிபொருள் கட்டணம் உயர்வு
March 10, 2026, 6:13 pm
கால்வாயில் வீசப்பட்ட ரூ.2 லட்சத்தை மீட்டுத் தந்த தீயணைப்பு வீரர்கள்
March 10, 2026, 5:11 pm
