செய்திகள் விளையாட்டு
ரசிகரால் கீழே விழுந்த மெஸ்ஸி
நியூயார்க்:
உலகக் காற்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியை ரசிகர் ஒருவர் கீழே தள்ளிய சம்பவம் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது.
அண்மையில் மெஸ்ஸியின் இன்டர்மியாமி, அணிக்கும் ஈக்குவடோரைச் சேர்ந்த இண்டிபெண்டியேண்ட்டே டெல் வாலியே அணிக்கும் நட்புமுறை ஆட்டம் போர்ட்டோ ரிக்கோவில் நடைபெற்றது.
அரங்கத்தில் சுமார் 20,000 ரசிகர்கள் இருந்தனர்.
ஆட்டத்தின் 88ஆம் நிமிடத்தில் ரசிகர்கள் திடீரென்று திடலுக்குள் விரைந்தனர். அதனால் ஆட்டம் தடைப்பட்டது.
திடலுக்குள் நுழைந்த ரசிகர் ஒருவர் மெஸ்ஸியுடன் நிழற்படம் எடுக்க முயன்றார்.
இன்னொருவர் மெஸ்ஸியிடம் தமது சட்டையில் கையெழுத்திடும்படி கேட்டார்.
மூன்றாவதாக ஒருவர் மெஸ்ஸியைப் பின்புறத்திலிருந்து இறுக்கிக் கட்டிப்பிடித்துக்கொண்டார்.
அவரைத் தடுக்கப் பாதுகாவலர் ஒருவர் விரைந்து வந்தார்.
ரசிகரைத் தள்ளிவிட முயன்றார்.
அப்போது கீழே விழுந்த ரசிகர் மெஸ்ஸி மீது கொண்டிருந்த பிடியைவிட மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 8, 2026, 8:30 am
அர்செனல் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும்: நிர்வாகி அர்தெதா
September 8, 2026, 8:27 am
எம்பாப்பே, ரொனால்டோவை முந்திய எர்லிங் ஹாலண்ட்: மெஸ்ஸியின் சாதனைக்கு பாதிப்பில்லை
September 7, 2026, 9:28 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா அபாரம்
September 7, 2026, 9:25 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
September 6, 2026, 9:45 am
சவூதி புரோ லீக்: அல் நசர் அணி தோல்வி
September 6, 2026, 9:42 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
September 5, 2026, 10:04 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் தோல்வி
September 5, 2026, 9:54 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் வெற்றி
September 4, 2026, 10:18 am
அனைத்துலக கால்பந்து வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற விரும்பும் பரேடெஸ் பிபா தடையை ஏற்க மறுக்கிறார்
September 4, 2026, 10:00 am
