செய்திகள் விளையாட்டு
மலேசிய கபடி அணி 20ஆவது ஆசியா விளையாட்டு போட்டியில் பங்கேற்கிறது: இந்தியாவில் நடைபெறும் கபடி சாம்பியன்ஷிப் போட்டியிலும் முதன்முறையாக மலேசியா கபடி அணி பங்கேற்பு
கோலாலம்பூர்:
ஜப்பானில் நடைபெறவுள்ள 20ஆவது ஆசியா விளையாட்டு போட்டி, இந்தியாவின் அகமதாபாத்தில் நடைபெறவுள்ள 2026 காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க மலேசியா கபடி அணி தயாராகி வருகிறது.
தேசிய விளையாட்டு மன்றத்தின் (MSN) கீழ் மலேசிய ஆடவர் கபடி அணி தற்போது தனது இறுதி கட்ட மையப்படுத்தப்பட்ட பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்தப் பயிற்சிகள் செப்டம்பர் 16-ஆம் தேதி வரை தொடரும் எனவும், அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 17-ஆம் தேதி காலையில் மலேசியாவிலிருந்து புறப்படும் அணி, ஹாங்காங் வழியாக ஜப்பானைச் சென்றடையும் எனவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த அணிக்கு மேலாளர் ஏ.எஸ்.பி லோகநாதன் தலைமை தாங்குகிறார். அதேவேளையில், தேசிய பயிற்சியாளர்களான விமல் மற்றும் பிரபா ஆகியோர் வீரர்களின் தொழில்நுட்பத் திறன், விளையாட்டு உத்திகள், உடற்தகுதி மற்றும் இறுதித் தேர்வுப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.
அதை தொடர்ந்து, அக்டோபர் 21 முதல் அக்டோபர் 31, 2026 வரை இந்தியாவின் அகமதாபாத்தில் நடைபெறவுள்ள தொடக்க கால காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் மலேசியா முதல்முறையாகப் பங்கேற்கவுள்ளது.
இந்த இரட்டை பன்னாட்டுப் போட்டிகள் மலேசிய கபடி விளையாட்டின் வளர்ச்சிக்கு மற்றுமொரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
இது விளையாட்டு வீரர்களுக்கு உயர்தரப் போட்டிகளில் விளையாடும் சிறந்த அனுபவத்தை வழங்குவதோடு, ஆடவர் மற்றும் மகளிர் அணிகளின் மேம்பாட்டையும் வலுப்படுத்துகிறது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 10:09 am
தேசிய ஒருமைப்பாடு ஓட்டம்; ஒற்றுமையை வலுப்படுத்தும்: சிவக்குமார்
September 15, 2026, 10:07 am
எப்ஏஎஸ் ஜூனியர் லீக் காலிறுதி சுற்றில் பெட்டாலிங் மாவட்ட கால்பந்து அணி
September 15, 2026, 9:45 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லீட்ஸ் யுனைடெட் வெற்றி
September 15, 2026, 9:42 am
எர்லிங் ஹாலண்டின் வெற்றி கோலை அனுமதித்த வீடியோ உதவி நடுவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது
September 14, 2026, 1:12 pm
4 வயதில் சர்க்கரை நோய்; முடியாது என்ற வார்த்தையை தாண்டி… US Open சாம்பியன்! - அம்மாவுக்கு நன்றி சொன்ன Zverev
September 14, 2026, 10:09 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா அபாரம்
September 14, 2026, 10:07 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
September 13, 2026, 10:20 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
September 13, 2026, 10:17 am
