நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: அர்செனல் வெற்றி

லண்டன்:

இங்கிலாந்து கரபாவ் கிண்ண கால்பந்து போட்டியில் அர்செனல் அணியினர் வெற்றி பெற்றனர்.

போர்ட்மேன் அரங்கில் நடைபெற்ற மூன்றாவது சுற்று ஆட்டத்தில் அர்செனல் அணியினர் இப்ஸ்விச் டவுன் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 4-2 என்ற கோல் கணக்கில் இப்ஸ்விச் டவுன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அர்செனல் அணிக்காக மேக்ஸ் டவ்மான் இரு கோல்களை அடித்தார்.

மற்ற கோல்களை நோனி மடுய்கே, மைக்கல் மெரினோ ஆகியோர் அடித்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து அர்செனல் அணியினர் கரபாவ் கிண்ண கால்பந்து போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

மற்றொரு ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மற்ற ஆட்டங்களில் பீட்டர்புரோக், புல்ஹாம், பிரின்போர்ட் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset