நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

எனக்கு முடிவே கிடையாது: ரொனால்டோ ரசிகர்களுக்கு நற்செய்தி

லிஸ்பன்:

கிறிஸ்டியானோ ரொனால்டோ, அனைத்துலக கால்பந்தில் விளையாடுவது குறித்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வரவிருக்கும் ஐரோப்பிய தேசிய  லீக் போட்டிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள போர்த்துகல் அணியில் ரொனால்டோ இடம் பெற்றுள்ளார்.

இதன் மூலம் அவர் அனைத்துலக கால்பந்திலிருந்து உடனடியாக ஓய்வு பெறப்போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது.

போர்த்துகல் அணி தனது ஐரோப்பிய நாடுகள் தேசிய லீக் பயணத்தை செப்டம்பர் 24 அன்று சொந்த மண்ணில் வேல்ஸ் அணிக்கு எதிராகத் தொடங்குகிறது.

2026 பிபா உலகக் கிண்ண தொடரின் காலிறுதிக்கு முந்தைய போட்டியில் ஸ்பெயினிடம் போர்த்துகல் தோற்று வெளியேறியது.

அதுவே தனது கடைசி உலகக் கிண்ணமாக இருக்கும் என ரொனால்டோ சுட்டிக்காட்டிய போதிலும், அனைத்துலக கால்பந்திலிருந்து ஓய்வு பெறுவது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை.

உலகக் கிண்ண தோல்விக்குப் பிறகு ராபர்டோ மார்டினெஸுக்குப் பதிலாக ஜார்ஜ் ஜெசஸ் போர்த்துகல் அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

சவூதி அரேபியாவின் அல் நசர் கிளப் அணியில் ரொனால்டோவுடன் இணைந்து பணியாற்றி லீக் பட்டத்தையும் வென்ற அனுபவம் கொண்டவர் ஜெசஸ்.

அணிக்குத் தேர்வாகியுள்ள அனைத்து வீரர்களும் எனக்குச் சமமானவர்களே. 

ரொனால்டோ சிறப்பாகச் செயல்பட்டால் அணியில் தொடர்வார், இல்லையெனில் வாய்ப்பு கிடைக்காது. 

அனைவரையும் ஒரே கோணத்திலேயே நான் அணுகுவேன் என்று ஜெசஸ் தெரிவித்துள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset