நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் அதிர்ச்சி தோல்வி

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் அர்செனல் அணியினர் அதிர்ச்சி தோல்வி கண்டனர்.

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் பிரிக்டோன் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அர்செனல் அணியினர் 0-3 என்ற கோல் கணக்கில் பிரிக்டோன் அணியிடம் தோல்வி கண்டனர்.

பிரிக்டோன் அணியின் வெற்றி கோல்களை பாஸ்கல் கிராஸ், சரலம்போஸ் கோஸ்டௌலஸ், செமா ஆண்ட்ரேஸ் ஆகியோர் அடித்தனர்.

நடப்பு சாம்பியன் அணியான அர்செனல் தொடர் வெற்றிகளை குவித்து வந்தனர்.

ஆனால் பிரிக்டோன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவ்வணி தோல்வி கண்டது அதன் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

மற்றொரு ஆட்டத்தில் அஸ்டன்வில்லா அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மற்ற ஆட்டங்களில் எவர்ட்டன், நியூகாஸ்டல் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset