நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி

லண்டன்:

இங்கிலாந்து கரபாவ் கிண்ண கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் வெற்றி பெற்றனர்.

எதிஹாட் அரங்கில் நடைபெற்ற மூன்றாவது சுற்று ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் நோர்விச் சிட்டி அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் சிட்டி அணியினர் 5-0 என்ற கோல் கணக்கில் நோர்விச் சிட்டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மென்செஸ்டர் சிட்டி அணிக்காக பிளொய்ட் சம்பா இரு கோல்களை அடித்தார்.

மற்ற ஆட்டங்களில் ராயன் செர்கி, ஏலன் எலியாஸ், ராயன் மெக்அய்டோ ஆகியோர் அடித்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து மென்செஸ்டர் சிட்டி அணியின் இங்கிலாந்து கரபாவ் கிண்ண கால்பந்து போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

லா லீகா கால்பந்து போட்டியில் வில்லாரியல், ரியால் பெதிஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset