நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட்டின் தலை தப்பியது

மாட்ரிட்:

லா லீகா கால்பந்து போட்டியில் எதிரணி வீரரின் கோலால் ரியல்மாட்ரிட் அணியின் தலை தப்பியது.

மார்டின்ஸ் வெலாரோ அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் எல்ஹி அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் எல்ஹி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

ரியல்மாட்ரிட் அணியின் வெற்றி கோல்களை கிளையன் எம்பாப்பே, கார்லோஸ் எஸ்பி ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு கோலை எதிரணி வீரர் தவறுதலாக அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு ஆட்டத்தில் வெலன்சியா அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் அலாவேய்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

ராயோ வலாகனோ அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பான்யோல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset