செய்திகள் விளையாட்டு
இந்தர்மியாமி அணிக்காக 100ஆவது கோல்: 48ஆவது கிண்ணத்தை வென்று லியோனல் மெஸ்ஸி உலக சாதனை
நியூயார்க்:
அமெரிக்க சாம்பியன் கிண்ண கால்பந்து போட்டியின் சாம்பியன் பட்டம் முதல் முறையாக வென்று இந்தர்மியாமி அணியினர் சாதனைப் படைத்துள்ளது.
வட அமெரிக்காவின் புகழ்பெற்ற கால்பந்து தொடராக அறியப்படும் சாம்பியன்ஸ் கிண்ண தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
இத்தொடரின் இறுதிப் போட்டியில், மேஜர் லீக் சாக்கர் தொடரின் தற்போதைய சாம்பியன் அணியான இந்தர்மியாமி, மெக்சிகோவின் அணியான க்ரூஸ் அஜுல் அணியை எதிர்த்துப் பலப்பரீட்சை நடத்தியது.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்தர்மியாமி அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது.
ஆட்டத்தின் 24ஆவது நிமிடத்தில் இந்தர்மியாமி அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி கோலடித்து அசத்தினார்.
இதன் மூலம் இந்தர்மியாமி கிளப் அணிக்காகத் தனது 100ஆவது கோல் மைல்கல்லையும் மெஸ்ஸி பூர்த்தி செய்து அசத்தியுள்ளார்.
ஆட்டநேர முடிவில் இந்தர்மியாமி அணி 2-0 என்ற கோல் கணக்கில் க்ரூஸ் அஜுல் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் சாம்பியன்ஸ் கிண்ணத்தை தொடர் வரலாற்றில் இந்தர்மியாமி அணி முதல்முறையாகப் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.
இதையடுத்து இத்தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தர்மியாமி அணிக்குப் பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2026, 9:34 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
September 16, 2026, 10:05 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட்டின் தலை தப்பியது
September 16, 2026, 10:03 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: அர்செனல் வெற்றி
September 15, 2026, 10:09 am
தேசிய ஒருமைப்பாடு ஓட்டம்; ஒற்றுமையை வலுப்படுத்தும்: சிவக்குமார்
September 15, 2026, 10:07 am
எப்ஏஎஸ் ஜூனியர் லீக் காலிறுதி சுற்றில் பெட்டாலிங் மாவட்ட கால்பந்து அணி
September 15, 2026, 9:45 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லீட்ஸ் யுனைடெட் வெற்றி
September 15, 2026, 9:42 am
