நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோ ஆர்.ஆர்.எம். கிருஷ்ணனின் மறைவு தமிழ் கூறும் நல் உலகிற்குப் பேரிழப்பாகும்: டத்தோஸ்ரீ சரவணன்

சிரம்பான்:

டத்தோ ஆர்.ஆர்.எம். கிருஷ்ணனின் மறைவு தமிழ் கூறும் நல் உலகிற்குப் பேரிழப்பாகும்.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

மலேசியத் தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் 4ஆவது தேசியத் தலைவராகவும், மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்ற முன்னால் உறுப்பினர்கள் பேரவையின் தேசியத் தலைவராகவும், மலேசியத் தமிழ்ப்பள்ளி   முன்னால்  மாணவர் சங்கங்களின் பேரவையின் தேசியத் தலைவராகவும், பல பொதுநல இயக்கங்களிலும் பொறுப்பேற்று  மணிச்சுடர் டத்தோ ஆர்.ஆர்.எம். கிருஷ்ணன் மிகச் சிறப்பாகப் பொதுப் பணியாற்றியுள்ளார்.

நான் அரசியல், பொதுச் சேவையில் ஈடுபட்டு வரும் காலம் முதல், நினைவில் வாழும் மணிச்சுடர் டத்தோ ஆர்.ஆர்.எம். கிருஷ்ணனை நன்கு அறிந்திருக்கிறேன்.

நமது நாட்டின் தமிழ் இளைஞர்களுக்கிடையில், மொழி உணர்வையும், இனப்பற்றையும் வளர்த்த இயக்கங்களில் முதன்மையான இயக்கமாகத் திகழ்வது மலேசியத் தமிழ் இளைஞர் மணி மன்றமாகும்.

அவர் மணிமன்றத்தின் வாயிலாகத் தன் சமூகப் பொதுப் பணியைத் தொடங்கி, அரசியல், தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கும் தன்னாலான பங்களிப்பைத் தொடர்ந்து வழங்கி வந்திருக்கிறார்.

மலேசிய இந்தியச் சமூதாயத்தில் அன்னாரின் புகழும், சேவையும் என்றும் நிலைத்திருக்கும்.

குறிப்பாக அவரின் மறைவு தமிழ் கூறும் நல் உலகிற்குப் பேரிழப்பாகும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset