செய்திகள் மலேசியா
அல்-குர்ஆனை அவமதித்த வழக்கில் தொடர்புடைய மாணவர் மீது விரைவில் குற்றம் சாட்டப்படும்
கோலாலம்பூர்:
அல்-குர்ஆனை அவமதித்ததாகக் கூறி இஸ்லாத்தை அவமதித்ததாக சமூக ஊடகங்களில் சீற்றத்தைத் தூண்டிய மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதாரங்களின்படி, அந்த நபர் மீது விரைவில் குற்றம் சாட்டப்படும் என கூறப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக மலேசியா பகாங் அல்-சுல்தான் அப்துல்லா பல்கலைக்கழக மாணவர் இந்த வார தொடக்கத்தில் கைது செய்யப்பட்டார்.
சம்பந்தப்பட்ட நபர் குர்ஆனை மிதிப்பதைக் காட்டும் புகைப்படத்தை சமூக ஊடக தளமான Threads இல் பதிவேற்றிய பின்னர் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தப் பகிர்வு சமூக ஊடக பயனர்களிடையே பரவலான கோபத்தைத் தூண்டியது.
அவர்கள் அதை ஒரு மதத் தூண்டுதல் என்று விவரித்தனர்.
பின்னர் அந்த மாணவர் போலிசாரால் கைது செய்யப்பட்டார்.
மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் தனது விசாரணையின் ஒரு பகுதியாக மாணவரின் வாக்குமூலத்தையும் பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 1, 2026, 11:24 pm
டத்தோ ஆர்.ஆர்.எம். கிருஷ்ணனின் மறைவு தமிழ் கூறும் நல் உலகிற்குப் பேரிழப்பாகும்: டத்தோஸ்ரீ சரவணன்
March 1, 2026, 11:23 pm
டோஹா, ஜெட்டா, மதீனாவுக்கான விமான பயணங்களை புதன்கிழமை வரை மாஸ் ரத்து செய்தது
March 1, 2026, 11:22 pm
சிரம்பான் தாமான் ராசா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் மாசி மக திருவிழா: விமரிசையாக நடைபெற்றது
March 1, 2026, 7:46 pm
ஜொகூரில் நோன்பு திறப்பு, ரமலான் உதவி வழங்கும் நிகழ்வு சமுதாய மக்களை ஒன்றிணைத்தது
March 1, 2026, 5:53 pm
பிபிபி கட்சியில் கல்வி உதவி அழைப்பு சேவை; அனைத்து மாணவர்களுக்கும் வழிகாட்டும்: விக்னேஷ்
March 1, 2026, 3:26 pm
