செய்திகள் மலேசியா
மலேசிய குடிமக்கள் கத்தாரில் பாதுகாப்பாக உள்ளனர்
கோலாலம்பூர்:
இன்று ஈரான் ஏவிய சில ஏவுகணைகள் கத்தாரின் வான்வழி பாதுகாப்பு அமைப்பால் தடுத்து நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கத்தாரில் உள்ள மலேசிய குடிமக்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த இடைமறிப்பு நடவடிக்கையின்போது வானில் சில வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டதாக விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.
“தற்போது எந்த மரணம், காயம் அல்லது சேதமும் பதிவாகவில்லை. கத்தாரில் உள்ள சுமார் 6,200 மலேசிய குடிமக்களும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கத்தாரின் நிலைமை அமைதியாகவும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் உள்ளது. அனைத்து மலேசியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தூதரகம் ஐந்து அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது,” என்ற தகவல் கிடைத்துள்ளது.
மேலும், வான்வழிப் போக்குவரத்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும், நிலைமை வழக்க நிலைக்கு திரும்பும் வரை மலேசியர்கள் தங்களது பயணங்களை ஒத்திவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், தூதரகம் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து, அவ்வப்போது மலேசிய அரசுக்கு தகவல்களைப் புதுப்பித்து வழங்கும்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 28, 2026, 8:28 pm
நாட்டின் தேசிய ஹாக்கி வீரர் ஆர்.ராமகிருஷ்ணன் காலமானார்
February 28, 2026, 8:02 pm
உள்ளூர் ஓவியக் கலைஞர்களுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்: டத்தோ சிவக்குமார்
February 28, 2026, 4:53 pm
நோன்பாளிகளின் சேவையில் குறைபாடு: TTDI அத்-தக்வா பள்ளிவாசல் நிர்வாகம் மன்னிப்பு கோரியது
February 28, 2026, 4:49 pm
புக்கிட் அமான் போலீஸ் அதிகாரி விபத்தில் உயிரிழந்தார்
February 28, 2026, 4:47 pm
சிலாங்கூர் மாநில 72,850 அரசு ஊழியர்களுக்கு நோன்புப் பெருநாள் ஊக்கத்தொகை அறிவிப்பு
February 28, 2026, 2:47 pm
வான்வெளியில் ஆபத்து அதிகரித்ததால் மலேசிய ஏர்லைன்ஸ் விமானங்கள் திருப்பி விடப்பட்டன
February 28, 2026, 1:30 pm
