செய்திகள் மலேசியா
அந்நியத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை; உள்ளூர் மக்களின் பிழைப்பில் மண் போட வேண்டாம்: டத்தோ கலைவாணர்
சிரம்பான்:
அந்நியத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்குவதன் வாயிலாக உள்ளூர் மக்களின் பிழைப்பில் மண் போட வேண்டாம்.
நம்பிக்கை இயக்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் கலைவாணர் இதனை வலியுறுத்தினார்.
சிரம்பான் லாபு மாபெரும் கட்டுமான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பல முன்னணி நிறுவனங்கள் கூட்டமைப்பில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாட்டின் வளர்ச்சிக்கு மேம்பாட்டுத் திட்டங்கள் அவசியமானது. இத்திட்டங்களை நான் எதிர்க்கவில்லை.
ஆனால் இந்த திட்டத்தில் வேலை செய்பவர்கள் அனைவரும் அந்நியத் தொழிலாளர்கள் ஆவர்.
கிட்டத்தட்ட 3 ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள்.
இதில் பெரும்பாலானோர் சட்டவிரோதமாக வேலை செய்வதாக எனக்கு புகார் கிடைத்துள்ளது.
குறிப்பாக கட்டுமான வேலைகளை தவிர்த்து லோரி, பெரிய பெரிய இயந்திரங்களை இயக்குவது அந்நிய நாட்டினர்கள் தான் என கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் தான் இன்று நாங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகிறோம்.
ஒரு கடையில் சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்கள் வேலை செய்தால் முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஆனால் இதுபோன்ற பெரிய நிறுவனங்களில் வேலை செய்யும் சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படுவது இல்லை.
இதில் ஏன் பாரபட்சம் பார்க்கப்படுகிறது என்று எனக்கு தெரியவில்லை.
ஆக இவ்விவகாரத்திற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இதன் அடிப்படையில் தான் நாங்கள் இம்முயற்சியை எடுத்துள்ளோம் என்று டத்தோ கலைவாணர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 26, 2026, 5:35 pm
டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவராக செயல்படுவார்
February 26, 2026, 5:32 pm
இயக்கவியல் தொழில்துறைக்கு ஏற்ப பட்டதாரிகளின் திறனை மேம்படுத்த மனிதவள அமைச்சு தீவிரம்: டத்தோஶ்ரீ ரமணன்
February 26, 2026, 5:32 pm
கிளந்தானின் தங்க மாதம்: தொழிலாளர் கட்டணம் குறைக்க தங்க வியாபாரிகளுக்கு அரசு அறிவுரை
February 26, 2026, 5:20 pm
திரெங்கானு வனத்துறையின் அதிரடி சோதனையில் RM43,000 மதிப்புடைய மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன
February 26, 2026, 4:47 pm
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் வட்டாரக் கூட்டங்கள் பிப். 28 முதல் நடைபெறும்: டத்தோ சகாதேவன்
February 26, 2026, 4:36 pm
கிளந்தானில் இருந்து பலர் பாலினம் மாற்றினார்களா?: குற்றச்சாட்டை ஆய்வு செய்யும் அரசு
February 26, 2026, 4:33 pm
பினாங்கு அரசு ஊழியர்களுக்கு ஹரி ராயா பரிசு: குறைந்தபட்சம் RM1,000 வழங்க அரசு அறிவிப்பு
February 26, 2026, 4:28 pm
3ஆர் விவகாரம் பரவாமல் இருக்க பல்கலைக்கழக மாணவர்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட வேண்டும்: டத்தோ சிவக்குமார்
February 26, 2026, 3:40 pm
