நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிளந்தானில் இருந்து பலர் பாலினம் மாற்றினார்களா?: குற்றச்சாட்டை ஆய்வு செய்யும் அரசு

கோத்தா பாரு: 

பாலினத்தை மாற்றிய பல தனிநபர்கள் கிளந்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற கூற்றுகளை உறுதிப்படுத்த முடியாது என்றும் மத அதிகாரிகள், தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் மூலம் விரிவாக மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்றும் கிளந்தான் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

 இதுவரை இந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் எந்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று இஸ்லாமிய மேம்பாடு, த'வா, தகவல், மக்கள் தொடர்புகளுக்கான மாநில ஆட்சிக்குழு பொறுப்பாளர் முஹம்மத் அஸ்ரி மாட் தாவூத் கூறியுள்ளார்.

கிளந்தான் இஸ்லாமிய மத விவகாரத் துறை (Jaheaik) சம்பந்தப்பட்ட தரப்புகளைச்  சந்தித்து விசாரணை நடத்தியுள்ளது. முழுமையான அறிக்கை தற்போது ஆய்வில் இருப்பதால், இறுதி அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், Jaheaik சுகாதாரத் துறையுடன் இணைந்து பாலினம் தொடர்பான பரிசோதனைகள் வரை மேற்கொள்ளப்படுகின்றன என்றும் விளக்கினார்.

பெண் போன்று அலங்கரிக்கும் சில ஆண்கள் ஆலோசனை, வழிகாட்டல் அமர்வுகளுக்காக அழைக்கப்பட்டுள்ளதாகவும், உத்தரவுகளை மீறுவோருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

“முதலில் அறிவுரை வழங்கப்படும். சிலர் தனிநபர் உரிமை என்ற பெயரில் பிடிவாதம் பிடிப்பதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவர்களால்தான் பிரச்சினைகள் உருவாகின்றன,” என்றார் அவர்.

இந்த விவகாரம் தீவிரமானதாக இல்லாவிட்டாலும் மதம், ஒழுக்கம், சமூக ஒற்றுமையைப் பாதிக்கும் என்பதால் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிக்காமல் தடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ‘கிளந்தானில் இருந்து பலர் ஈடுபட்டுள்ளனர்’ என்ற குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றாக அதிகாரப்பூர்வ ஆதாரங்களின் அடிப்படையில் ஆய்வு செய்யப்படும் என்றும், ஆதாரமின்றி குற்றம் சாட்டப்படமாட்டாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset