செய்திகள் மலேசியா
திரெங்கானு வனத்துறையின் அதிரடி சோதனையில் RM43,000 மதிப்புடைய மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன
கோலா நெருஸ்:
திரெங்கானு மாநிலத்தில் உள்ள கோலா நெருஸ் மாவட்டத்தில், திரெங்கானு மாநில வனத்துறை மேற்கொண்ட ஓப்ஸ் கூடா சோதனையின் போது, சட்டபூர்வ வரி செலுத்தாமல் சேமித்து வைக்கப்பட்ட மரக்கட்டைகளும், மர செயலாக்க உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இப்பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் RM43,000 ஆகும்.
வனத்துறை இயக்குநர் ரம்லி மாட் தெரிவித்ததாவது, பல்வேறு இனங்களையும் அளவுகளையும் கொண்ட 800 குறுகிய மரக்கட்டைகள், 48 நீளமான மரத்துண்டுகள் கைப்பற்றப்பட்டன.
பிப்ரவரி 8-ஆம் தேதி தொடங்கி, ஒரு வாரம் நீடித்த இந்த சோதனையில், சட்டவிரோதமாக மரக்கட்டைகள் கடத்தும் லாரிகள், நான்கு சக்கர வாகனங்கள், நிரந்தர வனப் பாதுகாப்புப் பகுதிகளில் உள்ள அபாய இடங்களும் கண்காணிக்கப்பட்டன.
கடந்த ஆண்டு மட்டும் 43 விசாரணை கோப்புகள் திறக்கப்பட்டு, இழப்பீடுகளாக RM10 லட்சத்திற்கும் அருகிலான தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வழக்குகளும் தேசிய வனச்சட்டம் 1984 அடிப்படையில் விசாரிக்கப்படுகின்றன; ஒரு வழக்கு நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 26, 2026, 5:35 pm
டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவராக செயல்படுவார்
February 26, 2026, 5:32 pm
இயக்கவியல் தொழில்துறைக்கு ஏற்ப பட்டதாரிகளின் திறனை மேம்படுத்த மனிதவள அமைச்சு தீவிரம்: டத்தோஶ்ரீ ரமணன்
February 26, 2026, 5:32 pm
கிளந்தானின் தங்க மாதம்: தொழிலாளர் கட்டணம் குறைக்க தங்க வியாபாரிகளுக்கு அரசு அறிவுரை
February 26, 2026, 4:47 pm
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் வட்டாரக் கூட்டங்கள் பிப். 28 முதல் நடைபெறும்: டத்தோ சகாதேவன்
February 26, 2026, 4:36 pm
கிளந்தானில் இருந்து பலர் பாலினம் மாற்றினார்களா?: குற்றச்சாட்டை ஆய்வு செய்யும் அரசு
February 26, 2026, 4:33 pm
பினாங்கு அரசு ஊழியர்களுக்கு ஹரி ராயா பரிசு: குறைந்தபட்சம் RM1,000 வழங்க அரசு அறிவிப்பு
February 26, 2026, 4:28 pm
3ஆர் விவகாரம் பரவாமல் இருக்க பல்கலைக்கழக மாணவர்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட வேண்டும்: டத்தோ சிவக்குமார்
February 26, 2026, 3:40 pm
ரமலான் சந்தைகளில் வெளிநாட்டவர் செய்யும் வியாபாரம்: குடிநுழைவு துறை கண்காணிப்பு தீவிரம்
February 26, 2026, 2:36 pm
