செய்திகள் மலேசியா
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் வட்டாரக் கூட்டங்கள் பிப். 28 முதல் நடைபெறும்: டத்தோ சகாதேவன்
கோலாலம்பூர்:
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் வட்டாரக் கூட்டங்கள் வரும் பிப்ரவரி 28ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் தலைமை செயலாளர் டத்தோ ப. சகாதேவன் இதனை தெரிவித்தார்.
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் ஜொகூர், மலாக்கா, பகாங், கிளந்தான், திரங்கானு, பேரா ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்கள் வாரிய வட்டாரக் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும்.
அவ்வகையில் ஜொகூர் மாநில வட்டார பொதுக்கூட்டம் குளுவாங், ஜாலான் மெங்கிபோல், இந்தியர் சங்க மண்டபத்தில் நாளை மறுநாள் பிப்ரவரி 28 சனிக்கிழமை மாலை 4:30 மணி அளவில் நடைபெறவுள்ளது.
மலாக்கா மாநில வட்டார பொதுக்கூட்டம் அதற்கு அடுத்த நாள் மார்ச் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை KM-23, ஜாலான் பத்து 14, பெம்பான், மலாக்கா என்னும் முகவரியில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ அருள்மிகு மாரி-யம்மன் ஆலய மண்டபத்தில் மாலை 4:30 மணி அளவிலும் பகாங், கிளந்தான் திரங்கானு ஆகிய மூன்று மாநிலங்களின் வட்டார பொதுக்கூட்டம் கேமரன் மலை கம்போங் ராஜா புளு வேலி என்னும் இடத்தில் அமைந்துள்ள அருள்மிகு மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் மார்ச் 5ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 4:30 மணி அளவிலும் நடைபெறும்.
பேரா மாநில வட்டார பொதுக்கூட்டம் ஈப்போ, ஜாலான் கொம்ப்ளக்ஸ் சுக்கான், லோட் எண் 4890-N என்னும் இடத்தில் (ஸ்டேடியம் பேரா அருகில்) அமைந்துள்ள மண்டபத்தில் மார்ச் 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணி அளவிலும் நடைபெற இருக்கின்றன.
தேசிய நில நிதி கூட்டுறவு சங்க சட்ட விதி 15-இன்படி வரும் 2025 ஜூன் 30ஆம் நாள் அல்லது அதற்கு முன் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் (அனைவரும்) மட்டும் இதில் கலந்து கொள்ள முடியும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
மேலே குறிப்பிட்டுள்ளபடி, தகுதி பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் அந்தந்த வட்டார, மாநில பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளும்படியும் அதேவேளை உறுப்பினர் அனைவரும் தத்தம் அசல் அடையாள அட்டையுடன் வரும் படியு டத்தோ ப. சகாதேவன் கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 26, 2026, 5:35 pm
டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவராக செயல்படுவார்
February 26, 2026, 5:32 pm
இயக்கவியல் தொழில்துறைக்கு ஏற்ப பட்டதாரிகளின் திறனை மேம்படுத்த மனிதவள அமைச்சு தீவிரம்: டத்தோஶ்ரீ ரமணன்
February 26, 2026, 4:36 pm
கிளந்தானில் இருந்து பலர் பாலினம் மாற்றினார்களா?: குற்றச்சாட்டை ஆய்வு செய்யும் அரசு
February 26, 2026, 4:33 pm
பினாங்கு அரசு ஊழியர்களுக்கு ஹரி ராயா பரிசு: குறைந்தபட்சம் RM1,000 வழங்க அரசு அறிவிப்பு
February 26, 2026, 4:28 pm
3ஆர் விவகாரம் பரவாமல் இருக்க பல்கலைக்கழக மாணவர்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட வேண்டும்: டத்தோ சிவக்குமார்
February 26, 2026, 3:40 pm
ரமலான் சந்தைகளில் வெளிநாட்டவர் செய்யும் வியாபாரம்: குடிநுழைவு துறை கண்காணிப்பு தீவிரம்
February 26, 2026, 2:36 pm
அமைதியும் முன்னேற்றமும் தான் மக்களின் விருப்பம்: அன்வார் இப்ராஹிம்
February 26, 2026, 1:05 pm
புக்கிட் பிந்தாங்கில் பரபரப்பு: தப்பிக்க முயன்ற வெளிநாட்டவர் மோதலில் குடியேற்ற அதிகாரியின் கால் முறிவு
February 26, 2026, 1:03 pm
