செய்திகள் மலேசியா
இயக்கவியல் தொழில்துறைக்கு ஏற்ப பட்டதாரிகளின் திறனை மேம்படுத்த மனிதவள அமைச்சு தீவிரம்: டத்தோஶ்ரீ ரமணன்
கோலாலம்பூர்:
வேகமாக வளர்ந்து வரும் இயக்கவியல் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப, உயர்கல்வி நிலைய பட்டதாரிகளின் திறன்கள் எதிர்கால வேலைவாய்ப்புச் சந்தைக்குப் பொருத்தமாக இருப்பதை உறுதி செய்யும் முயற்சியில் மலேசிய அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
மேலவையில் எழுப்பப்பட்ட வாய்மொழி கேள்வி ஒன்றிற்குப் பதிலளித்த மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை வலியுறுத்தினார்.
நாட்டின் திறமையாளர்களின் வளர்ச்சி என்பது வெறும் தரவுகளை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல், வேலைவாய்ப்புச் சந்தையின் உண்மையான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைய வேண்டும்.
இதற்காக அரசாங்கம், பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையினருக்கு இடையே திட்டமிட்ட கூட்டு ஒத்துழைப்பை மனிதவள அமைச்சு பலப்படுத்தி வருகிறது.
இந்த நோக்கத்திற்காக, தொழில்துறையினரால் வழிநடத்தப்படும் 18 'மைமாஹிர் எதிர்காலத் திறன் திறமையாளர் மன்றம்'- 'MyMahir Future Skills Talent Council' (FSTC) அமைப்புகளை மனிதவள அமைச்சு நிறுவியுள்ளது.
கடந்த டிசம்பர் 2025 நிலவரப்படி, சுமார் 59,000 தொழிலாளர் தேவைகளை இந்த மன்றம் கண்டறிந்துள்ளது.
இது இயக்கவியல் தொழில்நுட்பத் துறையில் துல்லியமான, சந்தை தேவைக்கு ஏற்ற பயிற்சித் திட்டங்களை வடிவமைக்க ஒரு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது.
மனிதவள அமைச்சின் கீழ் உள்ள பயிற்சி முகமைகள் முக்கியமாக தொழில்நுட்பம் மற்றும் தொழிற்பயிற்சி கல்விக்கு ‘திவேட்’ முன்னுரிமை அளித்தாலும், உயர்கல்வி நிலைய பட்டதாரிகளும் பல்வேறு உயர்தர திட்டங்கள் மூலம் ஆதரிக்கப்படுகின்றனர்.
அதன்படி, மனிதவள மேம்பாட்டு வாரியம் (HRD Corp), 'Internship Training Scheme' (ITS) எனும் திட்டத்தைச் செயல்படுத்துகிறது. இத்திட்டம் முதலாளிகளின் நேரடித் தேவைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட முறையான நடைமுறைப் பயிற்சிகளை வழங்குகிறது.
இதற்கான பயிற்சி பாடத்திட்டங்கள் நேரடியாக முதலாளிகளுடன் இணைந்தே உருவாக்கப்படுகின்றன.
தவிர, தேசிய திறமையாளர் மேம்பாட்டு நிறுவனம் (TalentCorp) அதன் 'MyMahir SkillsLab' திட்டத்தின் மூலம் தரவு பகுப்பாய்வு (Data Analytics), செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் சைபர் பாதுகாப்பு போன்ற எதிர்காலத் திறன் துறைகளில் தீவிரப் பயிற்சிகளை வழங்குகிறது.
இத்திட்டம் நேரடித் திட்டப்பணிகள் சார்ந்த பயிற்சிகளையும், தொழில்துறை வழிகாட்டல்களையும் உள்ளடக்கியுள்ளது.
மேலும், இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெறுவோருக்கு வேலைவாய்ப்பு நேர்காணல்கள் அல்லது பணி அமர்த்தல்களுக்கான உத்தரவாதம் வழங்கப்படுகிறது.
இதன் மூலம் பணிக்கு அமர்த்தப்படும் பட்டதாரிகளுக்கு, சந்தையின் சராசரி ஊதியத்தை விட 5 முதல் 15 சதவீதம் வரை கூடுதல் ஆரம்ப ஊதியம் வழங்கப்படுவதை டத்தோஶ்ரீ ரமணன் சுட்டிக்காட்டினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 26, 2026, 5:35 pm
டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவராக செயல்படுவார்
February 26, 2026, 5:32 pm
கிளந்தானின் தங்க மாதம்: தொழிலாளர் கட்டணம் குறைக்க தங்க வியாபாரிகளுக்கு அரசு அறிவுரை
February 26, 2026, 5:20 pm
திரெங்கானு வனத்துறையின் அதிரடி சோதனையில் RM43,000 மதிப்புடைய மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன
February 26, 2026, 4:47 pm
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் வட்டாரக் கூட்டங்கள் பிப். 28 முதல் நடைபெறும்: டத்தோ சகாதேவன்
February 26, 2026, 4:36 pm
கிளந்தானில் இருந்து பலர் பாலினம் மாற்றினார்களா?: குற்றச்சாட்டை ஆய்வு செய்யும் அரசு
February 26, 2026, 4:33 pm
பினாங்கு அரசு ஊழியர்களுக்கு ஹரி ராயா பரிசு: குறைந்தபட்சம் RM1,000 வழங்க அரசு அறிவிப்பு
February 26, 2026, 4:28 pm
3ஆர் விவகாரம் பரவாமல் இருக்க பல்கலைக்கழக மாணவர்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட வேண்டும்: டத்தோ சிவக்குமார்
February 26, 2026, 3:40 pm
ரமலான் சந்தைகளில் வெளிநாட்டவர் செய்யும் வியாபாரம்: குடிநுழைவு துறை கண்காணிப்பு தீவிரம்
February 26, 2026, 2:36 pm
