நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கு அரசு ஊழியர்களுக்கு ஹரி ராயா பரிசு: குறைந்தபட்சம் RM1,000 வழங்க அரசு அறிவிப்பு

ஜார்ஜ் டவுன்: 

 பினாங் மாநில அரசு, 1447H/2026M ஹரி ராயா கொண்டாட்டத்தையொட்டி, மாநில அரசுப் பணியாளர்களுக்கு ஒரு மாத சம்பளத்தின் பாதி அல்லது குறைந்தபட்சம் RM1,000 அளவிலான ஹரி ராயா சிறப்பு நிதி உதவியை (BKKA) வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நிதியுதவி மார்ச் 16க்குள் வழங்கப்படும் என்று மாநில முதல்வர் சௌ கொன் யியோ தெரிவித்தார்.

அரசு பணியாளர்களுக்கு மட்டுமல்லாமல் குர்ஆன், ஃபர்து ஐன் வகுப்புகள் (KAFA), மக்கள் மத தொடக்கப் பள்ளிகள் (SRAR), மக்கள் மத மேல்நிலைப் பள்ளிகள் (SMAR), அரசு உதவி பெறும் மதப் பள்ளிகள் (SABK), தஹ்ஃபிஸ், போண்டோக், இஸ்லாமிய மழலையர் பள்ளிகள் (TADIS), சீன தனியார் பள்ளிகளின் மேற்பார்வையாளர்கள், ஆசிரியர்களுக்கும் ஊழியர்களுக்கும் RM300 வழங்க மாநில அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

BKKA 2026 திட்டம் பினாங்கு அரசாங்கத்திற்கு மொத்தம் RM8.49 மில்லியன் நிதி தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் 7,317 பயனாளிகளுக்குப் பயனளிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

 மேலும், பினாங்கு மாநிலத்தின் 2030 தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் அவர்களின் பங்களிப்புகள், அர்ப்பணிப்புக்காக மாநில குடிமைப் பணியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் இது ஒரு பாராட்டு அடையாளமாகும்" என்று அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset